Pages

Saturday, November 5, 2016

அதிரையில் ஜி.கே வாசனுக்கு வரவேற்பு !

அதிராம்பட்டினம், நவ-05
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு அதிராம்பட்டினத்தில் அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் இன்று பகல் இராமேஸ்வரத்திலிருந்து அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை வழியே கும்பகோணம் பயணம் மேற்கொண்டார். அப்போது அதிராம்பட்டினத்தில் தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டுவந்து சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பேரூர் தமாகா தலைவர் எம்எம்எஸ் அப்துல் கரீம், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்எம்எஸ் பஷீர் அஹமது, தமாகா மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலு, பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், கட்சி நிர்வாகிகள் எம்எம்எஸ் சேக் நசுருதீன், எம்எம்எஸ் ரபி அஹமது, எம்எம்எஸ் இக்பால், இளைஞர் அணி நிர்வாகி இதயதுல்லா, கண்ணன், வீரப்பன், புஹாரி, சகாதேவன், சகாபுதீன், ரியாஸ் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டார்கள்.
 
 
 
 
 
 
 

4 comments:

  1. திமுகவுடன் கூட்டணி இல்லை ... அதிமுகவுடன் சேர சசிகலாவுடன் தூதுவிட்டார் அங்கேயும் கூட்டணி ஏமாற்றம் .. பிறகு மக்கள் நலக்கூட்டணி அங்கே அவருக்கு கெரகம் பிடித்தது.. இப்போ கட்சி ரொம்ப வீக். அரசியலுக்கு லாயக்கு தான் இல்லைன்னு T ராஜேந்தர் தாமதமாக உணர்ந்தார் அதேப்போல் இவருடைய கட்சி இருக்கு. வேல்முருகன் டீ கடையில் சூடா அருந்திக்கொண்டு தொண்டர்களுக்கு உற்சாகமா ஏதாவது சொல்லிருப்பாரே !

    ReplyDelete
  2. காங்கிஸில் முதலில் தன்னை முழுமை
    யாக நிலை நிறுத்திக்கொண்டபின்பு
    தனியாக களம் கண்டிருந்தால் ஓரளவு
    பிரபலமாகியிருக்கலாம். அதேசமயம்
    ஊடகங்களுக்கு நிதானித்து பேட்டி
    அளிக்கும் இவருடைய பக்குவம் எல்லா
    தலைவர்களுக்கும் வந்து விடாது.!
    அதிரைபுகாரி.

    ReplyDelete
  3. காங்கிஸில் முதலில் தன்னை முழுமை
    யாக நிலை நிறுத்திக்கொண்டபின்பு
    தனியாக களம் கண்டிருந்தால் ஓரளவு
    பிரபலமாகியிருக்கலாம். அதேசமயம்
    ஊடகங்களுக்கு நிதானித்து பேட்டி
    அளிக்கும் இவருடைய பக்குவம் எல்லா
    தலைவர்களுக்கும் வந்து விடாது.!
    அதிரைபுகாரி.

    ReplyDelete
  4. தந்தையின் செல்வாக்கை நம்பி
    தனியாக களம் கண்ட தனயன்
    இன்று தனிமரமாகி இருப்பதுதான்
    பரிதாபம்.!
    அதிரைபுகாரி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...