Pages

Friday, November 11, 2016

பட்டுக்கோட்டையில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் ( படங்கள் )

பட்டுக்கோட்டை, நவ-11
பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டுக்கோட்டை மத்திய தலைமை தபால் நிலையம் அருகில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருங்கிணைந்த முஸ்லீம் ஜமாத்தார்கள் இணைந்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மதியம் நடந்தது. மவ்லவி அயூப்கான் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தேங்கை சரபுதீன் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில பேச்சாளர் கோவை ஜாகிர், பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மாநில பேச்சாளர் அபூபக்கர் சித்திக் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், பொதுசிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.

இதில் பட்டுக்கோட்டை பகுதிகளின் அனைத்து ஜமாத்துகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவில் தமுமுக மாவட்ட பொருளாளர் டாக்டர் உமர் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பை அப்துல்லா செய்தார்.

இப்போராட்டத்தில் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்குரைஞர் நிஜாம் தலைமையில் அவ்வமைப்பினர் தன்னார்வலர்களாக இணைந்து இப்பகுதியின் வாகன போக்குவரத்தை சரிசெய்ய உதவினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...