Pages

Tuesday, November 15, 2016

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தே பயிற்சி வண்ண பட்டை வழங்கும் விழா !

அதிராம்பட்டினம், நவ-15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள உள்ளூர் புதுக்கோட்டை பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான கராத்தே பயிற்சி வண்ண பட்டை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆர்.ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பொறியாளர் ஏ.ஜி அறிவழகன் வாழ்த்துரை வழங்கினார். இஷ்ன்ரியூ கராத்தே தலைமை பயிற்சியாளர் சி. தயாளன், சென்சாய் தலைமை பயிற்சியாளர் என்.நாடிமுத்து ஆகியோர் மாணவர்களுக்கு சிறப்பு கராத்தே பயிற்சியளித்தனர். இதில் 130 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பட்டையம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாட்டினை பள்ளி மேளாளர் எஸ்.சுப்பையன் செய்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...