Pages

Friday, November 11, 2016

மாநில கால்பந்து போட்டிக்கு காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தேர்வு: மாணவர்களுக்கு பாராட்டு !

அதிராம்பட்டினம், நவ-11
மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை பாராட்டப்பட்டனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை ஆகிய 6 கல்வி மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையேயான சூப்பர் சீனியர் பிரிவு கால்பந்து போட்டி மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  காலிறுதிப் போட்டியில் நாகப்பட்டினம் அணியை 2-க்கு 1 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதிப் போட்டியில் தஞ்சாவூர் அணியை 2-க்கு 1 என்ற கோல் கணக்கிலும் வென்றனர். இறுதிப் போட்டியில் மயிலாடுதுறை அணியை 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மாநில அளவிலான கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.  இதையொட்டி, அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேலநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயகாந்தன், ராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...