Pages

Thursday, November 3, 2016

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு !

அதிராம்பட்டினம், நவ-03
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கும்பகோனம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை ஆகிய 6 கல்வி மாவட்டங்களுக்கு இடையே நடந்த மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் திருவாரூர் விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

அதில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் பி.முத்துராசு 400 மற்றும் 800 மீட்டர் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவிலான தடகளப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

மேலோர் 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் மாணவர்கள் பி.முத்துராசு, சிவா, ஏ அப்துல் ஹமீது, முஷரப் ஆகியோர் மூன்றாமிடம் பெற்றனர். மேலும் கீழோர் 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் என். அப்ஸர் கான், டி.ஷேக்தாவூது, ஹமீது, சமீர் ஆகியோர் மூன்றாமிடம் பெற்றனர்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி, விளையாட்டு ஆசிரியர்கள் ஜெயகாந்தன், ராஜா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...