Pages

Thursday, November 17, 2016

ஹரியானாவில் ஆடு, மாடுகளை போல் அடிமைகளாய் விற்கப்படும் சிறுமிகள் !

அதிரை நியூஸ்: நவ-17
இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுவதாக முதலைக் கண்ணீர் வடிப்போர் ஆளும் ஹரியானா மாநிலத்தில் இஸ்லாம் சுமார் 1435 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய அறவுரைகள் மூலம் இலகுவாக ஒழித்த மனித அடிமைமுறை இன்றும் தொடர்வதையும் இவர்களுக்காக கள்ள அழுகை அழக்கூட பொதுசிவில் பேர்வழிகள் அங்கு யாரும் தயாரில்லை என்பதையும் அறியும் எந்த மனித உள்ளமும் கலங்காதிருக்காது.

பெண் குழந்தைகளை கொல்வதை இஸ்லாம் 1435 ஆண்டுகளுக்கு முன்பே இறைசட்டத்தின் மூலம் அழகிய முறையில் முற்றிலும் தடுத்து நிறுத்தியது இஸ்லாம் பெண்களுக்கு பெற்றுத்தந்த வாழ்வுரிமைகளில் ஒன்று என்பதை கருத்துக் குருடர்கள் அறிவது நலம்.

ஆண் குழந்தை தான் வேண்டும் என்ற ஆணவப்போக்கினால் அழியும் பெண் கருக்களும், குழந்தைகளும் ஹரியானாவில் ஏராளம். மேற்காணும் காரணத்தால் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கையில் குறைந்திருப்பதன் விளைவாக மணப்பெண்களுக்கு அங்கே பெரும் தட்டுப்பாடு. இந்த தட்டுப்பாட்டை சமன்செய்ய அவர்கள் எடுத்திருக்கும் அயோக்கியத்தனமான குறுக்குவழியே பிற மாநிலங்களிலிருந்து சிறுமிகளை கடத்தி வந்து அடிமையாக்குவது,

இப்படி அடிமையாக விற்கப்படுபவர்களின் பணி வாங்கியவனுக்கு அடிமைச் சேவகம் புரிவதும் பிள்ளை பெற்றுக் கொடுப்பதும் மட்டுமே, அடிமையாய் பலர் கைகளுக்கு மாறும் அவலமும் இங்கு மிகச்சாதாரணம்.

சுமார் 12 வயதில் கடத்தி வரப்பட்டு 70 வயது கிழவனிடன் விற்கப்பட்ட சிறுமி முக்லேஷ் ஒரு பெண் குழந்தையை பெற்ற நிலையில் அடுத்த 3 வருடத்தில் அந்தக் கிழவன் மரணிக்க மீண்டும் ஒரு மனித மிருகத்திடம் விற்கப்பட்டாள். இந்த மிருகம் சிறுமி முக்லேஷை படுத்தாத கொடுமையில்லை, உணவுக்கு பதில் பலநாட்கள் வழுக்கட்டயாமாக வாயில் களிமண்ணை திணித்திருக்கின்றான். ஒருவழியாக கொடூரனிடமிருந்து முக்லேஷ் காப்பாற்றப்பட்டாலும் தான் எங்கிருந்து கடத்தி வரப்பட்டோம் என்பதைக் கூட அவரால் நினைவுகூற இயலாத அளவுக்கு புத்திசுவாதினம் அடைந்துள்ளார், இந்நிலையில் அவளது பொறுப்பில் 70 வயது கிழவனுக்கு பிறந்த மகள் வேறு 18 வயதை எட்டி பரிதவிக்கின்றாள்.

சஞ்சிதா என்கிற மற்றொரு சிறுமியும் 12 வயதில் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமிலிருந்து பக்கத்து வீட்டுப்பெண்ணால் ஹரியானாவுக்கு கடத்தி வரப்பட்டவள் ஆனால் இவளை விலை கொடுத்து வாங்கியவன் ஒரளவு நல்லவன் என்பதால் தற்போது 4 பெண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நிலையிலும் தன்னைப் போல் கடத்தி வரப்பட்டு அடிமை மனைவிகளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் சமூக அக்கறையுள்ளவராக திகழ்கிறார்.

வடமாநிலத்தில் சுமார் 10,000 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 9,000 பேர்கள் கடத்தி வரப்பட்ட அடிமை மனைவிமார்களே உள்ளனர் என்ற பேரதிர்ச்சியை வெளியிட்டுள்ளது "101 East documentary" எனும் ஆவணப்படம்.

கடத்தல், விற்பனை, கட்டாய கடும் வேலைகள், அடிமை மனைவி, மறுவிற்பனை என அலைகழிக்கப்படும் இவர்களை ஹரியானா கிராமத்தினர் "Paros" என வேறு அடையாள பெயரிட்டு கேவலப்படுத்துகின்றனர்.

இவர்களுக்கு சுயமாக சொத்து வைத்துக் கொள்ளவோ, வாரிசுரிமை கொண்டாடவோ அனுமதியில்லை. மேலும், அடிமைப்பெண்கள் யாராவது போலீஸ், கோர்ட்டு என நீதிதேடி போனாலும் விலைக்கு வாங்கும் ஆண்களுக்கு அல்லது அவர்களின் சமூகத்திற்கு இருக்கும் செல்வாக்கிற்கு முன் இவர்கள் மோடியின் செல்லாக்காசுக்கு நிகரே.

காவிகளோ அல்லது காங்கிரஸோ யார் ஹரியானாவை ஆட்சி செய்தாலும் பிற மாநிலங்களிலிருந்து சிறுமிகள் அடிமை வியாபார பொருளாக கடத்தி வரப்படுவதை நிறுத்தப்போவதில்லை ஆனால் காகித சட்டங்களை மட்டும் புதிய அட்டைகள் அவ்வப்போது மாற்றப்பட்ட புத்தகங்களாக அலங்கரிக்கின்றன. இந்த அயோக்கியர்கள் தான் பெண்ணுரிமையின் பிறப்பிடமான இஸ்லாமிய சட்டங்களை குறைகாண மோப்ப நாய்களாய் அலைகின்றனர்.

Source: Al Jazeera / msn
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. நெஞ்சை கணக்க வைக்கும் சோகக்கதை.''கண்நீர்தானோ என் வாழ்வில் நான் காணும் ஆனந்தம்''என்று ஒரு பெண் பாடும் திரைப்படபாடல் நினைவுக்கு வருகிறது. அல்லாஹ் பெண்களுக்கு வடிப்பதற்கு நிறைய கண்ணீரைகொடுத்திருப்பானோ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...