Pages

Monday, November 14, 2016

அவசர அறிவிப்பும், அவதிக்குள்ளான மக்களும்: 'அரசியல் விமர்சகர்' அதிரை பாருக்

டந்த 8.11.2016 நள்ளிரவு முதல் நடைமுறையில் இருந்த ரூபாய் 500 மற்றும் 1000 செல்லாது எனவும் இனிமேல் அவை வெறும் காகிதம் தான் என மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் திடீரென வெளியிட்ட அவசர அறிவுப்பு அமெரிக்க தேர்தல் செய்திகளைக் கூட பின்னுக்குத் தள்ளியது.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக ஒழித்து விடுவோம் என்ற மைய அரசின் திடீர் முடிவு ஓரளவு அவர்களுக்கு பலன் அளிக்கக் கூடியது என்பதை ஒப்புக் கொண்டாலும், எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்யாமல் அவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அறிவிக்கப்பட்ட ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவுப்பு தவறானது என்பதை பெரும்பாலான மக்களின் கோபத்திற்கு காரணமாக உள்ளது என்பதை கண்கூடாக நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் பார்க்கின்றோம்.

மாற்று ஏற்பாடு என்று நான் குறிப்பிட விரும்புவது, அரசு அறிவித்த 4000 ரூபாயை அவசரமாக வாங்க பள்ளிகள், கல்லூரிகள், தாலுக்கா
அலுவலகங்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் போன்ற இடங்களில் இந்த மாற்று ஏற்பாடுகளை அரசு செய்திருந்தால், அவர்கள் அறிவித்த 4000 ரூபாயை கோடிக் கணக்கான மக்கள் ஒருசில தினங்களிலேயே பெற்றிருக்க முடியும். அந்த மாற்று ஏற்பாடுகளை இப்போதாவது அரசு செய்தால் அன்றாட செலவுகளுக்கு தேவையான பணத்தை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் தினசரி அலையாமல் வாங்கிக் கொள்ள முடியும்.

பணத்தை டெபாசிட் செய்யும் போதே செலவுகளுக்குத் தேவையான குறைந்த பட்ச தொகையை வழங்கச் சொல்வது மக்களின் சிரமங்களை குறைக்கும் என்பது கூட அரசுக்குத் தெரியவில்லையா? அல்லது புரியவில்லையா? பணத்தைப் போடுவதற்காக ஒரு வரிசை நிற்கிறது.
அதே மக்கள் பணத்தை திரும்ப எடுக்க மீண்டும் வந்து கூட்டமாக நிற்பது மேலும் பொதுமக்களுக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் தேவையில்லாத பணிச் சுமையை உருவாக்குகிறது என்பது கூட அரசுக்குத் தெரியவில்லையா ?

இந்தத் திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் பெரும்பாலான வர்த்தகங்கள் முடக்கப்பட்டுள்ளன என்பதே மக்களின் கவலையாக உள்ளது. சுpல
தினங்களில் நிலைமை சரியாகி விடும் என்று கூறியவர்கள் இப்போது சில வாரங்களில் சரியாகிவிடும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் 5 தினங்களாக மற்ற வேலைகள் எதுவும் பார்க்க முடியாதவாறு அல்லல்படுவதை அரசு கவனிக்கவில்லையா ? கறுப்பை அரசு
வெள்ளையாக்குவதற்குள் வெள்ளையாக இருப்பவர்களெல்லாம் தொடர்ந்து வெயிலில் பணத்தை மாற்றவும், போடவும் மாறி மாறி நாள் கணக்கில் அலைந்தே கறுப்பாகி விடுவார்கள் போன்று தோன்றுகிறது. இந்தக் கருப்பை வெள்ளையாக்க மருந்து கடைகளில் போய் ஏதாவது கிரீம்
வாங்கி தடவிக் கொள்ள வேண்டியது தான். கருப்பு கலர் மீண்டும் வெள்ளையாகி விடும்.

சுதந்திரம் பெற காரணமாக இருந்த பலரில்; ஒருவரான மகாத்மா காந்தி அவர்கள் சொன்ன அறிவுரைகளும் வங்கிகள் உட்பட பல இடங்களில் உள்ளன. 1948 ல் காந்தியை சுட்டார்கள். இப்போது காந்தியை தீயிட்டு கொளுத்துகிறார்கள். அதாவது, (காந்தி படம் போட்ட பழைய
நோட்டுகளை 500, 1000 ).

காந்தி அவர்கள் சொன்னது: 
நமது இடத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். நம்மை நம்பி அவர்கள் இல்லை. அவர்களை நம்பித்தான் நாம் இருக்கின்றோம் என்பது தான். ஆனால், இப்போது உள்ள சூழ்நிலைகளைப் பார்த்தால் மகாத்மா காந்தி அவர்கள் சொன்னதை எல்லாம் மாற்றி எழுதும் படியாக உள்ளது. வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பணம்
இல்லை, பணம் வந்து கொண்டிருக்கிறது, லேட்டாக வாருங்கள் என்று கூறியே நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களை வெளியே பிடித்து தள்ளக் கூடிய அவல நிலை உருவாகிவிட்டது.

பிரதமர் திடீர் அறிவுப்பு செய்த அன்று (8.11.2016) 500 மற்றும் 1000 நள்ளிரவு 12.00 மணி முதல் செல்லாது எனக் கூறியதும், அவை எல்லாம் இனிமேல் வெறும் காகிதங்கள் என்று நாட்டு மக்களுக்கு செய்தியாக சொன்னதும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இன்னமும் அந்த ரூ 500 ம் ரூ 1000 ம் உயிரோடு தான் இருக்கின்றன. பிறகு எதற்காக அவையெல்லாம் வெறும்
காகிதங்கள் என்று கூற வேண்டும். இதைப் பற்றி அவர் தான் விளக்கம் கூற வேண்டும்.

16.11.2016 முதல் 16.12.2016 வரையோ அல்லது அதற்கும் மேல் சில நாட்கள் கூடுதலாகவோ செயல்படவுள்ள பாராளுமன்றத்தில் எத்தனை நாட்கள் வீணாகப் போகிறது என்பது போகப் போகத் தெரியும். 1991 ல் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு வெளியிட்ட புதிய பொருளாதார
கொள்கை சர்வதேச அளவில் பரபரப்பாகவும், பாராட்டியும் பேசும் படியாக அமைந்தது.

(என்னுடைய சில திட்டங்களும் அதற்கு துணையாக இருந்தது). நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்து அடகு வைக்கப்பட்ட தங்கத்தையும் காங்கிரஸ் அரசு மீட்டது. இந்த செய்திகளை பல்வேறு பத்திரிக்கைளும் இன்னமும் பாராட்டி எழுதிக்கொண்டிருக்கின்றன. அப்போதைய பிரதமர் திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களுக்கும் நிதித்துறையில் இருந்த டாக்டர். மன்மோகன் சிங் அவர்களுக்கும், வர்த்தக அமைச்சராக இருந்த திரு. ப.சிதம்பரம் அவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும். இதில் முன்னால் பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் இறந்துவிட்டதால் அவருக்கு நோபல் பரிசு வழங்கமாட்டார்கள். நான் குறிப்பிட்ட இவர்கள் நீங்கலாக மேலும், பலரும் காங்கிரஸில் இருக்கிறார்கள். நோபல் பரிசைப் பற்றிய சில முக்கிய விபரங்களை விரைவில் உங்களுக்கெல்லாம் தெரிவிக்க உள்ளேன்.

நான் மேலே சொன்னபடி பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 த்தை மாற்றிக் கொள்ள உடனடியாக மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இல்லையெனில், மக்கள் மேலும், பல நாட்களுக்கு அலைய வேண்டிய அவல நிலை ஏற்படும். தவிர ரூபாய் 10, 20, 50, 100 நோட்டுகளை ரூ 4000 த்தில் பாதியாவது வழங்க வேண்டும். புதிய அறிவிப்பின் பலன்கள் தெரிய குறைந்தது 6 மாதங்களுக்கு மேல் ஆகலாம்.

நன்றி!

ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்' 
68 காலியார் தெரு, 
அதிராம்பட்டினம் - 614 701. 
பட்டுக்கோட்டை தாலுகா, 
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...