Pages

Friday, November 4, 2016

மல்லிபட்டினத்தில் புதிய பாலகம் திறப்பு!

மல்லிபட்டினம், நவ-04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள மல்லிபட்டினம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள மரியம் வணிக கட்டிடத்தில் புதிதாக தமிழ் பால் விநியோக மையம் நேற்று முன்தினம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக மரியம் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ஏ.சரபுதீன் கலந்துகொண்டு பாலகத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை ஜி.கே டெய்ரி நிறுவன துணை பொது மேலாளர் கே. ராஜகோபால் தொடங்கி வைத்தார்.

தொடக்கத்தில் பாலக விற்பனை மையத்தின் உரிமையாளர் சி.வீரையன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் மல்லிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மருதமுத்து, மல்லிபட்டினம் ஜமாத் செயலர் எம்.கே சாகுல்ஹமீது, தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கத் தலைவர் அப்துல் சமது, மல்லிபட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இம்மையத்தில் பால், தயிர், வெண்ணெய், பசுநெய் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
 
 
 
 
 
 

1 comment:

  1. புதிய பாலகம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நேரத்தில் நூலகம் அமைக்க அரசு அதிகாரிகள் ஆவணசெய்ய வேண்டும். அடிக்கடி பிரச்சனைக்கு உள்ளாகும் பகுதியென்பதால் அறிவைவளர்க்க நேரத்தை பயனுள்ளதாக அமைய தேவையான இடத்தில் நூலகம் அமைந்தால் பள்ளிமாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் . தொழில் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...