Pages

Monday, November 28, 2016

எமிரேட்ஸ், எதிஹாத் விமானங்களில் சிறப்பு சலுகை கட்டணங்கள் அறிவிப்பு !

அதிரை நியூஸ்: துபாய், நவ-28
எதிர்வரும் டிசம்பர் 2 அன்று அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை கொண்டாடவுள்ளது. இந்தக் கொண்டாடங்களின் தங்களின் பங்களிப்பாக அமீரகத்தின் விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எதிஹாத் விமான நிறுவனங்கள் கட்டண சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.

இன்று முதல் 10 தினங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் கட்டண சலுகையை பயன்படுத்தி எகனாமி மற்றும் பிஸ்னஸ் வகுப்புக்களில் வாங்கும் டிக்கெட்டுகளை கொண்டு 2016 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 2017 ஜூன் 15க்குள் பறக்கலாம்.

எமிரேட்ஸ் விமானத்தில் துபையிலிருந்து பயணிக்க எகனாமிக் வகுப்பில் ரிட்டர்ன் கட்டண சலுகையுள்ள தடங்கள்:
சென்னை-கொச்சி – 920 திர்ஹம்
மும்பை – 850 திர்ஹம்
டெல்லி – 930 திர்ஹம்
மஸ்கட் - 700 திர்ஹம்
ஏதென்ஸ் - 1,820 திர்ஹம்
சிங்கப்பூர் - 1,620 திர்ஹம்
லண்டன் - 2,150 திர்ஹம்
செபுகிளார்க்மணிலா – 1,710 திர்ஹம்
நியூ யார்க் - 3,330 திர்ஹம்
மாஸ்கோ – 1,950 திர்ஹம்
கராச்சி – 910 திர்ஹம்
அம்மான் - 990 திர்ஹம்
மெல்போர்ன் - 3,890 திர்ஹம்
பேங்காக் - 1,790 திர்ஹம்
குவைத் - 680 திர்ஹம்
கோலாலம்பூர் - 1,480 திர்ஹம்
இஸ்தான்பூல் - 1,520 திர்ஹம்
போஸ்டன் - 3,830 திர்ஹம்
தோஹா – 680 திர்ஹம்
நைரோபி – 1,160 திர்ஹம்

எதிஹாத் விமான நிறுவனம் 45 தடங்களில் 45% கழிவுடன் எகனாமி மற்றும் பிஸ்னஸ் வகுப்புக்களில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்யும் வாய்ப்பினை வழங்கியுள்ளது.

டிசம்பர் 2 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த சிறப்பு சலுகையின் கீழ் டிக்கெட் எடுப்பவர்கள் 2017 ஜூன் 10 ஆம் தேதி வரை பயணம் செய்யலாம். எனினும் நியூ யார்க், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் இந்தியாவுக்கு பொருந்தாது என்றாலும் மும்பை செல்ல குறைந்த கட்டணமாக 734 திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எதிஹாத் டிக்கெட் சலுகை குறித்து மேலும் விபரங்கள் அறிய இந்த சுட்டிக்குள் செல்லவும்:

http://flights.etihad.com/en-ae/flights-from-united-arab-emirates

Source: Gulf News & Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...