Pages

Tuesday, November 15, 2016

போட்டோ பைத்தியங்களால் மலை முகட்டில் கிடத்தப்பட்ட பச்சிளங்குழந்தை !

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, நவ-15
சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் புனித மக்கா செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அல் ஹாதா மலையின் (Al Hada Mountain) மேல் அமைந்துள்ள திக்கத் அல் ஹல்வானி (Dikkat Al Halwani) எனும் பகுதி பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த மலைவாச சுற்றுலா தலத்திற்கு பன்னாட்டு மக்களும் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில், யாரோ ஒரு பொறுப்பற்ற பெற்றோர் தங்களின் பச்சிளங்குழந்தையை ஆபத்தான மலைமுகட்டில் வைத்து ஞாபகார்த்த? போட்டோ என ஒன்றை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட தற்போது கடும் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்து தண்டிக்கவும் பலரும் கோரி வருகின்றனர்.

ஏற்கனவே ஆபத்தோடு விளையாடும் செல்ஃபி பைத்தியங்கள் அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற ஞாபகார்த்த சாபக்கேடுகள் வேறு முளைப்பது சமூகத்தில் என்னென்ன சேதங்களை விளைவிக்குமோ?

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...