Pages

Tuesday, November 8, 2016

பட்டுக்கோட்டையில் முதன்முறையாக தாவரக்கொல்லி திரவத்தால் ஆகாயத்தாமரைகள் அழிப்பு ( படங்கள் )

பட்டுக்கோட்டை, நவ-08
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து பட்டுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் மற்றும் நீர்வரத்துப் பகுதிகள் தூர்வாரப்பட்டு வருகிறது.

மேலும், பட்டுக்கோட்டை நகரப் பகுதியிலுள்ள குளங்களில் ஆகாயத் தாமரை  செடிகள் சூழ்ந்துள்ளதால் நீர் வரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த தனியார் அமைப்பும், மதுரை பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் கிராம உயிர் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து தயாரித்துள்ள பயோபைன் என்ற இயற்கை தாவரக்கொல்லியை பயன்படுத்தி குளத்திலுள்ள ஆகாயத்தாமரையை அழிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இப்பணியை மேற்பார்வையிட்ட பின் மதுரை பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரிப் பேராசிரியர் எஸ். ராஜேந்திரன் கூறியது:

பயோபைன் என்ற தாவரக்கொல்லி முற்றிலும் இயற்கைப் பொருள்களைக்  கொண்டு தயாரிக்கப்பட்டது. இது செடிகளில் தெளிக்கும்போது தாவரக் கொல்லியாகவும், நீரில் கரைக்கும்போது கொசு குஞ்சுகள் கொல்லியாகவும்
இரு விதங்களில் செயல்படும் தன்மையுடையது.

முதல் கட்டமாக திங்கள்கிழமை பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையிலுள்ள அய்யனார் கோயில் குளத்தில் சோதனை முறையில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களை கொண்டு பயோபைன் தாவரக்கொல்லி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டது.

இவ்வாறு செய்வதால் அடுத்த 7 முதல் 10 நாள்களில் ஆகாயத்தாமரைகள் முற்றிலுமாக காய்ந்து அழிந்து விடும். பிறகு அவை குளத்திலிருந்து அகற்றப்படும். அதன் பின்னர் நீர்நிலைகளின் தரம் மேம்படுவதுடன், கொசுக்கள் உற்பத்தியும் கட்டுப்படுத்தப்படும்.

தமிழகத்திலேயே முதல் முறையாக திங்கள்கிழமை பட்டுக்கோட்டை நகராட்சியில் சோதனை அடிப்படையில் குளத்தில் பயோபைன் தெளித்து பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில நகரிலுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் இதே முறை முழு அளவில் நடைமுறைபடுத்தப்படும்.

அத்துடன் நகர் பகுதிகளில், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் இயற்கை கிருமி நாசினியை பட்டுக்கோட்டை பேருந்து நிலைய சுகாதார வளாகம், அதனருகிலுள்ள கழிவுநீர் கால்வாய்களிலும் பரிசோதனை அடிப்படையில் தெளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

பேட்டியின் போது பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கே. அச்சையா, துப்புரவு அலுவலர் அந்தோனி ஸ்டீபன், துப்புரவு ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.  
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...