Pages

Thursday, November 10, 2016

அதிரையின் வறண்ட குளங்களுக்கு ஆற்றுநீர் இறைக்கவும் - குப்பைகளை அகற்றவும் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர் கோரிக்கை !

அதிராம்பட்டினம், நவ-10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெரு பகுதியில் இயங்கி வருகிறது சம்சுல் இஸ்லாம் சங்கம். மிகவும் பழமை வாய்ந்தது. இதன் ஒரு அங்கம் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு. சமீபத்தில் இதன் நிர்வாகத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவராக எஸ்.எச் அஸ்லம் பொறுப்பில் இருந்த போது இப்பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 43.50 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்து முடிந்தன. இதன்பின்னர் அதிராம்பட்டினத்தில் உள்ள ஆலடிக்குளம் மற்றும் செக்கடி குளம் ஆகியவற்றிற்கு பம்பிங் மூலம் ஆற்று நீர் இறைத்து நிரப்பட்டன. தற்போது இக்குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

இந்நிலையில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரண்டு வந்து அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் வறண்டு காணப்படும் அதிராம்பட்டினம் குளங்களுக்கு ஆற்று நீரை பம்பிங் மூலம் நீர் இறைத்து நிரப்பவும், அதே போல் சம்சுல் இஸ்லாம் சங்கம் எல்லைக்குட்பட்ட பேரூராட்சி 12, 13, 14, 19, 20, 21 ஆகிய வார்டு பகுதிகளில் குப்பை, கூளங்கள் அள்ளப்படத்தால் துர் நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது எனக்கூறி துரித நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...