Pages

Friday, November 4, 2016

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், நவ-04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சங்கத் தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக் தலைமை வகித்தார். செயலர் முத்துகிருஷ்ணன், பொருளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலச் செயலர் பேராசிரியர் செய்யது அகமது கபீர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

பட்டுக்கோட்டை செல்லும் சாலையோரத்தில் இன்று மரகன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டன. மேலும் அதிரையின் பல்வேறு பகுதிகளில் 100 இடங்களில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. கன்றுகளை பாதுகாக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் பட்டுக்கோட்டை சாலை அதிராம்பட்டினம் பேரூர் எல்லை முடிவுப் பகுதியில் பொதுமக்களை வரவேற்று நன்றி தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மாவட்டத்தலைவர்கள் முஹம்மது முகைதீன், மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி, சாகுல் ஹமீது, செல்வராஜ், எஸ்.ஏ அப்துல் ஹமீது, பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், ஆஃப்ரின் நெய்னா முஹம்மது, சாரா அகமது, முன்னாள் உடனடித் தலைவர் ஆறுமுகச்சாமி, உறுப்பினர்கள் அதிரை மைதீன், நிஜாமுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...