Pages

Wednesday, November 2, 2016

உலகின் மிகக் குறுகிய தூர விமான சேவையில் ஓர் சாதனை !

அதிரை நியூஸ்: நவ-02
பிரிட்டீஷ் அரசுக்கு சொந்தமான, ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள ஆர்க்னி தீவு (Orkney) கூட்டத்தின் 2 குட்டித்தீவுகளான வெஸ்ட்ரே (Westray) மற்றும் பாப்பா வெஸ்ட்ரே (Papa Westray) இடையே பறக்கும் குட்டி விமானம் தனது 10 லட்சமாவது (1 மில்லியன்) பயணியை சுமந்து சென்று சாதனை படைத்தது.

இன்னும் படிங்க! ஸ்காட்லாந்தின் லோகான் ஏர் (Logan Air) நிறுவனத்தால் 1967 ஆம் ஆண்டு முதல் பறக்கும் இந்த விமானத்தின் மொத்த இருக்கையே 8 தான். இதில் 10,000 முறையாக பயணம் செய்த தி ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்தின் வங்கி ஊழியர் அன்னி ரேண்டல் என்ற பயணியும் இந்த சாதனை பயணத்தின் போது கௌரவிக்கப்பட்டார்.

சுமார் 2.7 கி.மீ. (1.7 மைல்) தூரமேயுள்ள இந்த விமான பயணம் 2 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் மேலும் பலமான காற்றடித்தால் 47 நொடிகளிலேயே தரையிறங்கிவிடுமாம்

ஆர்க்னி தீவுக்கூட்டங்களின் விமான நிலையங்களை சுற்றி வந்து இணைக்கும் இந்த விமான சேவையை ஆசிரியர்கள், மாணவர்கள், காவலர்கள், மருத்துவர்கள் போன்றோரே அதிகமாக பயன்படுத்துகிறார்களாம்.

சுமார் 2.7 கி.மீ. (1.7 மைல்) தூரமேயுள்ள இந்த விமான பயணம் 2 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் மேலும் பலமான காற்றடித்தால் 47 நொடிகளிலேயே தரையிறங்கிவிடுமாம். இந்த விமானத் தடம் உலகின் மிகக் குறுகிய தடம் என கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...