Pages

Wednesday, November 23, 2016

துபாய் - அபுதாபி இடையே புதிய நெடுஞ்சாலை: சிறப்பு பார்வை !

அதிரை நியூஸ்: துபாய், நவ-23
அமீரகத்தில் வாகன போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அபுதாபி – துபை இடையேயுள்ள ஷேக் ராஷித் பின் மக்தூம் நெடுஞ்சாலையும் ஒன்று. இந்த நெடுஞ்சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சாலைக்கு இணையான இன்னொரு புதிய நெடுஞ்சாலையை 2014 ஆம் ஆண்டு முதல் 2.1 பில்லியன் திர்ஹம் செலவில் 64 கி.மீ. தூரத்திற்கு அமைக்கும் பணிகளை அபுதாபி அரசு மேற்கொண்டு தற்போது 98 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த வருட இறுதிக்குள் பணிகள் முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறந்துவிடப்படும்.

அபுதாபி – துபை எமிரேட்டுகளின் எல்லைப்பகுதியான 'ஷேக் ஸூஐப்'  (Seih Shuaib) எனுமிடத்தில், ஷேக் முஹமது பின் ஜாயித் சாலையின் நீட்சியாக அமைந்துள்ள இன்டெர்சேஞ்ச் எக்ஸிட் எண்: 311 (E 311) முதல் துவங்கும் இந்த புதிய சாலை அபுதாபியின் சுவைஹான் இன்டர்சேஞ்ச் வரை நிறுவப்பட்டுள்ளது. எனவே, அபுதாபி நகருக்குள் செல்வோர் அல் மஹா காடுகள் (Al Maha Forest), காட்டுப்புற பகுதிகள் (Forestry Green Belt), கலீபா துறைமுகம் (Khalifa Port), கலீபா தொழிற்பேட்டை (khalifa Industrial Zone), அபு முரைக்கா (Abu Mureikha) மற்றும் ஜாயித் ராணுவ முகாம் (Zayed Military Camp) வழியாக சென்றடையலாம். மேலும், அபுதாபி சர்வதேச விமான நிலையம் (Abu Dhabi Int'l Airport), யாஸ் ஐலேண்ட் (Yas Island), சாதியாத் ஐலேண்ட் (Saadiyat Island), அல் பலாஹ் (Al Falah), அல் சம்ஹா (Al Samha) மற்றும் வெளிப்புற குடியிருப்பு (Residential Area on the Outskirts of Abu Dhabi) பகுதிகளுக்குச் செல்ல இலகுவான வழியாக அமையும்.

இந்த நெடுஞ்சாலையின் சிறப்பம்சங்கள்:
இந்த புதிய நெடுஞ்சாலையில் 6 இன்டர்சேஞ்சுகள் (Inter-changes), 6 நிலஅடி வழிகள் (Under Passes), இரண்டு புறமும் தலா ஒரு பெட்ரோல் நிலையங்கள் 'ஷேக் ஸூஐபில்' இருந்து துவங்கும் முதலாம் மற்றும் இரண்டாம் இன்டர்சேஞ்சுகளுக்கிடையே அமைந்திருக்கும். அவசரகால உபயோகத்திற்கு என 5 திருப்பங்கள் ('U' Turns)அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இருபுறமும் தலா 4 வழிகளுடன் (4 Tracks) சாலையின் நடுவே 20 மீட்டர் இடைவெளி (Median) விடப்பட்டுள்ளது, இதன் மூலம் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மேலும் இருபுறமும் தலா ஒரு கூடுதல் (Track) வழிகளை அமைத்துக் கொள்ள முடியும். நெடுஞ்சாலை முழுவதும் 300 மீட்டருக்கு ஒன்று என இருபுறமும் 800 மின்விளக்கு கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸூகள் போன்ற அவசரகால வாகனத்தேவைக்காக 6 தனி சாலையோரத் தொகுதிகளும் ( Lay-Bys) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மணிக்கு 8000 வாகனங்கள் இந்த சாலையை கடக்க முடியும். மிருகங்கள் சாலையினுள் குறுக்கே வராதவகையில் இருபுறமும் தடுப்புச் சுவர்களும் எழுப்பப்பட்டுள்ளன.

அவர்கள் சொல்ல மறந்தது: 
கட்டாயம் ரேடார் கேமரா இருக்குமுங்க!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...