Pages

Wednesday, November 2, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் TNPSC குரூப்-IV தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நிறைவு விழா !

அதிராம்பட்டினம், நவ-02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தின் சார்பாக இலவச பயிற்சி முகாம் ( TNPSC குரூப்-IV  ) கடந்த அக்- 20 ந்தேதி தொடங்கி இன்று புதன்கிழமை மாலை நிறைவடைந்தது.

இப்பயிற்சி முகாமின் நிறைவு விழா இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம். உதுமான் முகையதீன்  தலைமை வகித்து, மாணவர்கள் எப்படி தேர்வு எழுத வேண்டும், எந்தெந்த பாடங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தேர்வுக்குரிய வினாக்களுக்கான விடைகளை  எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சாய் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் கேரியர்ஸ் பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் திருஞானம், செயலர் செந்தமிழ்ச்செல்வி, கல்லூரி தொழில் வழிகாட்டி மையம் அமைப்பாளர் முனைவர்.ஏ. சேக் அப்துல் காதர், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ. ஹாஜா அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். விழா முடிவில் பேராசிரியர் முனைவர்.ஏ. சேக் அப்துல் காதர் நன்றி கூறினார்.

இம்முகாம் பட்டுக்கோட்டை சாய் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் கேரியர் ஸ்டடீஸ் பயிற்சி மையத்தின் பயிற்றுனர்களின் உதவியுடன் கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. முகாமில் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அனைவருக்கும் TNPSC குரூப்-IV தேர்விற்கான நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டன.
 
 
 
 
 
 
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...