Pages

Saturday, November 5, 2016

TNTJ ( அமீரகம், அதிரை ) அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு !( படங்கள் )

துபாய், நவ-05
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ( TNTJ ) அமீரகம் - துபாய் வாழ் அதிராம்பட்டினம் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நேற்று 04-11-2016 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் துபாய் மண்டலத்தில் உள்ள புதிய JT மர்க்கசில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபாய் டேரா கிளையின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பொருளாளர் ஆசிக் அஹமத் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் அதிரை TNTJ துபாய் கூட்டமைப்பின் கடந்தகால செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து குறித்து விவாதிக்கபட்டன. மேலும் அதிரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை-1 மற்றும் கிளை 2 ல் நடக்கும் இஸ்லாமிய தாவா பணி மற்றும் நிர்வாக செலவீனங்கள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன.

இதன் பின்னர் அதிரை TNTJ துபாய் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் எம்.அயூப் கான் (056 582 6035), எஸ் முகம்மது (055 658 2851), எம். முகம்மது சலீம் (055 909 0726) ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நிறைவில் TNTJ துபாய் தேய்ரா கிளையின் பொருளாளர் ஆசிக் அஹமத் இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழி ஆற்றினார். இக்கூட்டத்தில் TNTJ  அமீரகம் துபாய்வாழ் அதிரை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...