Pages

Friday, December 16, 2016

அதிரையில் சமூக பண்பலை வானொலி [ ADIRAI FM 90.4 ] தொடக்க விழா !

அதிராம்பட்டினம், டிச-16
'நமது சமூகம், 'நமது நலன்' என்பதை குறிக்கோளாகக்கொண்டு கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்வளம், போக்குவரத்து, அரசு அறிவிப்புகள் உட்பட சமூக முன்னேற்றத்திற்கு பயன்தரும் பல்வேறு பொதுநிகழ்ச்சிகள், தினமும் 6 மணி நேரம் ( காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ), தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற 40 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகள், பட்டுக்கோட்டை, மல்லிபட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை வரையிலான 10 ஏர் மைல் தூரத்தில் வசிக்கக்கூடிய சுமார் 2.50 லட்சம் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் சமூக பண்பலை வானொலி - அதிரை FM 90.4 எதிர்வரும் [ 18-12-2016 ] ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவில் துவக்கி வைக்கப்பட உள்ளது.

சமூக பண்பலை வானொலி - அதிரை FM 90.4 நிர்வாகத் தலைவர் ஹாஜி. எம்.எஸ் தாஜுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு. ஆ. அண்ணாதுரை இ.ஆ.ப அவர்கள் கலந்துகொண்டு பண்பலை வானொலி முதல்நாள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.

அதிரை பண்பலை வானொலி 90.4 நிகழ்ச்சி தயாரிப்புக்குழு சார்பில் சமூக நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக அதிரை FM 90.4 நிகழ்ச்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு. எம்.கே செந்தில் குமார், நிகழ்ச்சி தயாரிப்புக்குழு தலைவர் பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் உட்பட கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய 13 பேர் கொண்ட நிகழ்ச்சி தயாரிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை பொதுமக்களிடம் இலகுவாக எடுத்துச்செல்லும் விதத்தில், நிர்வாகம் சார்பில் கிராமப் பகுதி மக்கள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதர நிலையங்கள், அங்கன் வாடிகள், தேனீர் விடுதிகள், சாலையோர வியாபாரிகள், வாடகை வாகன ஓட்டிகள், சலூன் கடைகள், ஊராட்சிமன்ற அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட சுமார் ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வானொலிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீத சலுகை கட்டணத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

5 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...