Pages

Monday, December 5, 2016

சென்னையில் ADWA நடத்திய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்: நேரடி ரிப்போர்ட் ! ( படங்கள் )

சென்னை, டிச-05
அதிராம்பட்டினம் டெவெலப்மெண்ட் அன்ட் வெல்ஃபேர் அசோஸியேசன் (ADWA) சார்பில் 'அரசு உயர் பதவி வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்' சென்னை, மூர் தெரு இந்தியன் பேலஸ் ஹோட்டல் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் முஹம்மது முகைதீன் தலைமை வகித்தார். பிரபல தொழில் அதிபர் எம்.எஸ் தாஜுதீன், சென்னை உயர்நீதி மன்ற ஒய்வு பெற்ற மூத்த வழக்குரைஞர் ஏ.ஜே அப்துல் ரெஜாக், தொழில் அதிபர் ஏ.ஜே தாஜுதீன், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் தாளாளர் டாக்டர் எஸ்.எம்.எஸ் அஸ்லம், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை நாகை காய்தே மில்லத் கல்லூரி பேராசிரியர் ஜே. ஹாஜா கனி, இனியதிசைகள் மாத இதழ் நிறுவனரும், இஸ்லாமியத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சே.மு.மு முகமது அலி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.

இதில் அரசு உயர் பதவிகளில் இடம்பெற போட்டித்தேர்வுகளுக்கு தயாராவது எப்படி? 'டிஎன்பிஎஸ்சி' போன்ற அரசு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? அதில் வெற்றி பெறுவது எப்படி ? என்பது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சென்னை ஆலிம் சாலிஹ் பொறியியல் கல்லூரி பேராசிரியர் முஹம்மது ரபீக் பவர் பாயிண்ட் மூலம் செயல்விளக்கப் பயிற்சியை அளித்தார்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் இனிய தமிழில் தொகுத்து வழங்கினார். தொடக்கத்தில் ஹாபிழ் அப்துல் பத்தாஹ் கிராத் ஓதி தொடக்கி வைத்தார். அவ்வமைப்பின் துணைத்தலைவர் அசரப் அலி வரவேற்றார். முடிவில் கூடுதல் செயலர் எம்.எம்.எஸ் ஜாஃபர் சாதிக் நன்றி கூறினார்.

முகாமில் சென்னைவாழ் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட 135 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

முகாம் துளிகள்:
1. அதிராம்பட்டினத்தை சேர்ந்த சென்னை பன்னாட்டு விமான நிலைய ஏர்இந்தியா விமான இயக்குனரக மேலாளர் எம்.எம்.எஸ் ஜாஃபர் சாதிக், மத்திய கலால் துறையில் ஆய்வாளராக பணியாற்றும் மீரா சாஹிப் ஆகியோர் முகாமில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

2.  'டிஎன்பிஎஸ்சி' குருப்-1 தேர்விற்கான மாதிரி வினாத்தாள் / விண்ணப்ப படிவங்கள் முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

3. இஸ்லாமியத் தொண்டு நிறுவனத் தலைவர் சே.மு.மு முகமது அலி அவர்கள் ஆர்வமுள்ள அதிரை மாணவர்களுக்கு தனது ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் அகடமியில் இலவசமாக பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தார்.

4. முகாம் குறித்து பயனாளிகளிடம் கருத்துரை கோரி படிவங்கள் வழங்கப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...