Pages

Thursday, December 8, 2016

அதிரையில் தேசப்பொடி மீன் சீசன் துவக்கம்: விலை போகாததால் மீனவர்கள் ஏமாற்றம் !

அதிராம்பட்டினம், டிச-08
அதிராம்பட்டினத்தில் தேசப்பொடி மீன் சீசன் துவங்கி உள்ளது. எதிர்பார்த்த விலை போகாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஆறுமுககிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். இவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிராம்பட்டினம் கடலோரப்பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இப்பகுதியில் கடும் மூடுபனியும் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் அதிகளவில் தேசசப்பொடி மீன்கள் சிக்கின. இங்குள்ள வியாபாரிகள் மீனவர்களிடம் தேசப்பொடி மீன்களை மொத்தமாக வாங்கி கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம், காந்திநகர் மீனவர் வீரப்பன் கூறுகையில்; கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலோரப்பகுதியில் தொடர் மழை பெய்தது. இந்திய வானிலை மையம் விடுத்த புயல் எச்சரிக்கை அறிவிப்பால் 3 நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வீட்டில் இருந்தோம்.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை இரவு படகுகளில் மீன் பிடிக்க சென்றோம். இதில் அதிகளவில் வெள்ளி மீன் என்ற பெயரில் அழைக்கப்படும் தேசப்பொடி மீன்கள் வலையில் சிக்கியது. எங்களிடம் இங்குள்ள மீன் வியாபாரிகள் கிலோ ரூ. 80 க்கு மொத்தமாக வாங்கி கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்தனர். வழக்கமாக ரூ.100 லிருந்து ரூ.150 வரை விலை போகும். நாங்கள் எதிர்பார்த்த விலை தற்போது கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தோம்' என்றார்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...