Pages

Wednesday, December 21, 2016

சலுகை, இழப்பு, இறப்பு - சர்வதேச விமான செய்திகள் !

அதிரை நியூஸ்: துபாய், டிச21
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்: சிறப்பு கட்டண சலுகை அறிவிப்பு:
எமிரேட்ஸ் விமான நிறுவனம் 'ஹலோ 2017' என்ற சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ் இங்கிலாந்தின் அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் துபைக்கும், துபை வழியாக பிற நாடுகளுக்கு செல்வதற்கான சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

இந்த கட்டண சலுகை ரிட்டர்ன் டிக்கெட்டுகளை 2016 டிசம்பர் 19 முதல் 2017 ஜனவரி 31க்குள் வாங்கினால்,

2017 ஜனவரி 16 முதல் 2017 டிசம்பர் 7 ஆம் தேதி வரையும்,
2017 ஜனவரி 13 முதல் 2017 டிசம்பர் 7 ஆம் தேதி வரையும்,
2017 பிப்ரவரி 7 முதல் 2017 ஜூன் 30 வரையும்

என மூன்று குறிப்பிட்ட சலுகை கால அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்க் உள்ளே செல்லவும்.

https://www.emirates.com/uk/english/destinations_offers/special_offers/featured-fares/?intc_type=fares&intc_name=fares&intc_creative=link&intc_location=home

தகவலுக்காக: 
லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து துபை வழியாக சென்னை சென்று திரும்ப எமிரேட்ஸ் விமான கட்டணம் 329 (GBP) பவுண்டுகளே.

எதிஹாத் ஏர்லைன்ஸ்: வேலை இழப்பு
அமீரகத்தின் 2வது பெரிய விமான நிறுவனமும் அபுதாபி அரசுக்கு சொந்தமானதுமான எதிஹாத் விமான நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சுமார் 27,000 ஊழியர்கள் பணியாற்றும் இந்நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஈட்டிய நிகர லாபத்தில் 41 சதவிகிதம் சரிவு கண்டதாலும், பெட்ரோல் விலை வீழ்ச்சியாலும் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது என்றாலும் எத்தனை பேர் வேலையிழக்க நேரிடும் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

சுமார் 125 விமானங்களை கொண்டு சேவையாற்றி வரும் எதிஹாத் நிறுவனம் உலகளவில் பல விமான நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கியுள்ளது. அதன்படி, அலிடாலியா நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகள், ஏர் பெர்லீன் நிறுவனத்தின் 29 சதவிகித பங்குகள், ஏர் ஷெஷல்ஸ் நிறுவனத்தின் 40 சதவிகித பங்குகள், விர்ஜின் ஆஸ்திரேலியாவின் 19.9 சதவிகித பங்குகள், ஐரிஸ் விமான நிறுவனமான ஏர் லிங்குஸின் 3 சதவிகித பங்குகள் மற்றும் நம் இந்தியாவின் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் 24 சதவிகித பங்குகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

செபு பசிபிக் ஏர்லைன்ஸ்: இறப்பு
சிங்கப்பூரிலிருந்து பிலிப்பைன்ஸின் செபு நகரை நோக்கி சென்று கொண்டிருந்த செபு பசிபிக் ஏர்லைன்ஸின் 45 வயதுடைய துணை விமானி ஆஸ்டிரியா ஜூனியர் நடுவானில் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

துணை விமானி உயிரிழக்கும் போது 136 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் பறந்து கொண்டிருந்த விமானம் பத்திரமாக செபு மக்டான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

மரணம் நீங்கள் எங்கிருந்தாலும் அடைந்தே தீரும், நீங்கள் உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்தாலும் சரியே (4:78) என்ற குர்ஆனிய வசன சுருக்கத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டுகின்றேன்.

ஆடு பலி கேட்ட பாகிஸ்தானி விமானம்:
நடப்பு டிசம்பர் 7 ஆம் தேதி அன்று பாகிஸ்தானில் நடைபெற்ற விமான விபத்தில் சுமார் 47 பயணிகள் இறந்ததை தொடர்ந்து தரையிறக்கப்பட்ட அனைத்து ATR-42 மாடல் பிரான்ஸ் தயாரிப்பு விமானங்களும் தொழிற்நுட்ப மறுபரிசோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சோதனைகள் அனைத்தும் முடிந்து விமானங்கள் பறக்கத் தயாரானதை தொடர்ந்து ஒரு கருப்பு ஆடு ஒன்றை விமான தளத்தில் பலி கொடுத்து ATR-42 மாடல் விமான போக்குவரத்தை அதிகாரிகள் துவக்கி வைத்ததை தொடர்ந்து இஸ்லாமாபாத்திலிருந்து முல்தான் நகருக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

இது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிர்வாகத்தின் முடிவு இல்லீங்களாம் விமான நிலைய ஊழியர்களாக செஞ்சுகிட்டாகலாம், நல்லவேளை பழக்க தோஷத்துல ஆளப்போடாம ஆட்ட போட்டானுங்க!

Source: The Indian Express / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...