Pages

Thursday, December 15, 2016

கிராமங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர் பேச்சு !

கிராமங்களை மக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.

பட்டுக்கோட்டை வட்டம், செம்பாளுர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
மத்திய, மாநில அரசுகள் இணைந்து பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளன. இத்திட்டத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்ய டிச. 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கிராமங்களை மக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏரி, குளங்கள் தூர்வாரப்படுகின்றன. கிராமப் பொருளாதாரம், கிராமப் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார் ஆட்சியர்.

முன்னதாக 52 பேருக்கு ரூ. 4,75,503 மதிப்புள்ள இலவச வீட்டு மனைப்பட்டா, 7 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்கள் 11 பேருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகையாக தலா ரூ. 12,500, திருமண உதவித்தொகையாக 5 பேருக்கு தலா ரூ. 8000, 13 பேருக்கு முதியோர் உதவித் தொகை மற்றும் விதவை உதவித்தொகையாக ரூ. 1,56,000 மற்றும் 57 பேருக்கு புதிய குடும்ப அட்டை என மொத்தம் 146 பேருக்கு ரூ. 8,19,003 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

ஏற்கெனவே பொதுமக்களிடமிருந்து 99 மனுக்கள் பெறப்பட்டு அதில் 22 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், எஞ்சியவை பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

முகாமையொட்டி வேளாண் மை, தோட்டக்கலை, கால்நடைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் அரசின் நலத் திட்டங்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

பயிற்சி ஆட்சியர் பிரசாந்த், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் கே. உதயகுமார், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் மாசிலாமணி, வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சி. மணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வெங்கட்ராமன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவி, சமூகநல அலுவலர் பாக்கியலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...