Pages

Wednesday, December 7, 2016

முதல்வர் ஜெ மறைவு: அமெரிக்கா கலிபோர்னியாவில் தமிழர் உணவகங்கள் விடுமுறை !

முதல்வர் ஜெயலலிதா நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு காலமானார். பின்னர் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் உடல் வைக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்னை மெரீனா கடற்கரை எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். மேலும் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் வாழும் தமிழர்கள் மறைந்த முதல்வர் செயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சென்னை கிங்ஸ் உணவக உரிமையாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் கலிபோர்னியா மகாணம் மவுண்டைன் வியூ, சான் ஜோஸ், சான்பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகளில் உள்ள அதன் கிளை உணவகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...