Pages

Sunday, December 25, 2016

எல்லாம் ஒரு வெளம்பரந்தேன் !.....

இன்றைய வணிகப் போட்டிகள் நிறைந்த உலகில் மக்களின் கவனத்தை தங்களின் பக்கம் ஈர்ப்பதற்காகவும், வியாபாரத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் என்னென்ன வழிகள் உள்ளதோ அத்தனையையும் வணிகர்கள் முயற்சிப்பர், அதில் பல விளம்பரங்கள் அந்நிறுவனங்கள் விற்கும் பொருளுக்கும் செய்யப்படும் விளம்பரத்திற்கும் சம்பந்தமே இருக்காது.

மேலும் பல டுபாக்கூர் ஆசாமிகள் தங்களின் தோற்றத்தை, நடையுடையையே மூலதனமாக்கி கண்ட கருமத்தையும் மக்களின் தலையில் கட்டிவிடுவார்கள் அப்படிப்பட்ட ஆட்களில் ஒருவரே பதஞ்சலி வியாபாரி, இவரைப் போன்றவர்களுக்கு அரசியல் பின்புலமும் ஆட்சியாளர்களின் ஆசியும் எப்போதும் இருக்கும், காரணம் 'கமிஷன்'.

சரி நாம் சொல்ல வந்த விளம்பர யானையைப் பற்றி பார்ப்போம்....
தஞ்சையில் செயல்படும் பிரமாண்ட ஜவுளி நிறுவனங்களில் ஒன்று தற்போதைய கிருஸ்துமஸ், கிருஸ்தவ புத்தாண்டு, பொங்கல் போன்று வரிசையாக வரும் சீசன் வியாபாரத்தை குறிவைத்து மக்களை ஈர்க்கும் வகையில் ஓர் யானையை தன் நிறுவன வாசலில் கட்டி வைத்துள்ளது!

இந்த யானையை பார்க்கும் எவரும் முதல் பார்வையிலேயே காதலில் விழும் காதலர்களை போல புறத்தோற்றத்தை கண்டு ஏமாறுவது நிச்சயம், அவ்வளவு தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளது இந்த எலக்ட்ரானிக் யானை பொம்மை. தலையை அசைத்தும் துதிக்கையை உயர்த்தியும் முன்பகுதி மட்டும் யானை அசைவதைப் போலவே ஒரளவு அசைந்தும் கண்ணாமூச்சி காட்டும் இந்த பிரமாண்ட பொம்மை சைனாக்காரனின் திறமையை? ஞாபகப்படுத்துகின்றது.

அசல் யானையை கண்டு அலறும் குட்டீஸ்களும் பெண்களும் கூட தைரியத்துடனும் குதூகலத்துடனும் தொட்டுத் தழுவி உற்சாகத்துடன் செல்கின்றனர், வெற்றிகரமானதோர் விளம்பரம்.

J. ஆசிக் அஹமது 
(மாணவ செய்தியாளர்)
 

3 comments:

 1. சங்க கால தமிழர்கள் யானை கட்டி போரடிசாங்க!இந்தகால தமிழ்ழர்கள் யானை காட்டி காஸு அடிக்கிறாங்க.காலம் மாறுகிறது

  ReplyDelete
  Replies
  1. ரசிக்கும்படியான கமெண்ட்!

   Delete
 2. மற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சில பொருட்களை பதஞ்சலி நிறுவனம், தங்களின் லேபிளை பயன்படுத்தி தவறாக விளம்பரப்படுத்தி வருவதாக 2012 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது., தீர்ப்பில் அந்நிறுவனத்துக்கு 11 லட்சம் அபராதம் விதித்தது வருங்காலத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. .காரணமென்னவெனில் அந்நிறுவனத்தின் தயாரிப்பான தேன், உப்பு ஆய்வு செய்ததில் இந்த பொருட்கள் தர சோதனையை தோல்வி அடைந்தன. நம்மவூரில் விற்கும் பாலுக்கு தரப்பரிசோதனை செய்றாங்களா., விலையை தான் பார்க்கிறோம் தரத்தை பார்ப்பதில்லை .. டீக்கடைக்கு ஒருவகையான பால் வீட்டுக்கு மற்றொருவகைப்பால் சப்லைபண்ணுறாங்க, சோதிக்க லேபும் இல்லை அதிகாரியும் இல்லை.

  நிஜ யானையை வைத்தால் மிருகவதை சட்டம் பாயும் என்பதால் ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம் மாற்றுவழியை அலசி ஆராய்ந்ததில் சிக்கியது சீனாவின் தயாரிப்பு.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...