Pages

Tuesday, December 27, 2016

மட்டி பிடி தொழிலில் பணத்தை அள்ளும் ஓமன் மீனவர்கள் !

அதிரை நியூஸ்: ஓமன், டிச-27
வருடத்திற்கு சுமார் 12 நாட்களே நீடிக்கும் 'அபலோன்' (Abalone) எனப்படும் ஒரு வகை மட்டிகள் (Shellfish) (கிளிஞ்சல்கள்) சீசன் ஓமனில் துவங்கியுள்ளது. இத்தகைய அபலோன் மட்டிகள் ஓமனின் 'தோபார், மிர்பாத், ஷாலிம், ஷாதா மற்றும் அல் ஹானியாத் தீவு ஆகிய கடற்பரப்பில் மட்டுமே கிடைக்கக் கூடியவை. இந்த சுவைமிகுந்த அபலோன் மட்டிகள் ஹாங்காங்கிற்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த 5 வருட மட்டி அறுவடை சராசரி கணக்கின்படி ஓமன் மீனவர்களால் சீசன் சமயத்தில் சுமார் 40,000 டன் வரை பிடிக்கப்படுகிறது, இதன் மதிப்பு 2 மில்லியன் ஓமன் ரியால்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரகத்திற்கு தக்கவாறு கிலோ 35 முதல் 70 ஓமன் ரியால்கள் வரை விலைபோக்கூடிய அபலோன் மட்டிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சமைக்கப்பட்ட ஒரு பிளேட் சுமார் 120 அமெரிக்க டாலருக்கு நிகராக விற்பனை செய்யப்படுகிறது. சமைக்கபட்ட அபலோன்களிலிருந்து மனிதர்களின் திட்ட உணவிற்கு (Human Diet Food) தேவையான ஒமேகா - 3 என்ற கொழுப்பு அமிலம் (Omega - 3 fatty acid) வெளிப்படும்.

ஓமன் மீன்வள அமைச்சகத்திலிருந்து சிறப்பு லைசென்ஸ் பெற்றே இந்த அபலோன் மட்டி பிடிப்பில் ஈடுபட முடியும். முத்து குளிப்பது போன்றே குளிரான கடலுக்குள் சுமார் 8 மீட்டர் ஆழம் வரை மூச்சடக்கி சென்று அபலோன்களை சேகரிக்க வேண்டும்.

2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வை தொடர்ந்து அபலோன் மட்டிகளை செயற்கை மீன்பிடிமுறை சீரழிவுகளிலிருந்து காப்பதற்காக மீனவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் டார்ச் லைட்கள் எடுத்துச் செல்லவும் தடை விதித்திருக்கும் ஓமன் அரசு அவ்வப்போது சில வருட சீசன் சமயங்களில் இனப்பெருக்கத்திற்காக அபலோன்களை பிடிக்கவும் தடைவிதிக்கும், அப்படி கடந்த 2015 ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த 12 நாள் அபலோன் மட்டி சீசனில் மட்டும் இத்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் சராசரியாக குறைந்தபட்சம் 500 முதல் 700 ஓமன் ரியால்கள் வரை லாபம் ஈட்டுவார்கள், இந்தத் தொகை நடுத்தரவர்க்க மீனவர்களின் 3 மாத குடும்பத் தேவைகளுக்கு போதுமானது. இந்த வருடம் சுமார் 45,000 டன் அபலோன்கள் பிடிக்கப்படலாம் என எதிர்பார்த்துள்ளது ஓமன் மீன்வள அமைச்சகம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...