Pages

Friday, December 9, 2016

துபாய் இந்திய துணை தூதரகத்தின் புதிய கன்சுலர் ஜெனரல் விரைவில் நியமனம் !

அதிரை நியூஸ்: துபாய், டிச-09
துபையில் செயல்படும் இந்திய துணை தூதரகத்தின் கன்சுலர் ஜெனரலாக 2013 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் அனுராக் பூஷன் அவர்களின் பதவி காலம் விரைவில் நிறைவடைவதையொட்டி புதிய கன்சுலர் ஜெனரலாக 'விபுல்' (Vipul) அவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவர் பதவியேற்கக்கூடும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. விபுல் அவர்கள் தற்போது வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் அலுவலகத்தில் இணைச் செயலாளராக (Joint Secretary) பணியாற்றிவருகிறார்.

கடந்த திங்கட்கிழமை அன்று தான் அமீரகத்திற்கான புதிய இந்திய தூதராக ஆஸ்திரேலியாவில் இந்திய ஹை கமிஷனராக பணியாற்றி வந்த நவ்தீப் சிங் சூரி அவர்கள் அபுதாபியில் பொறுப்பேற்றார். சூரிக்கு முன் தூதராக பணியாற்றிய T.P. சீதாராமன் அவர்கள் கடந்த ஆகஸ்டிலேயே பணி ஓய்வு பெற்றுச் சென்றிருந்தார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...