Pages

Wednesday, December 7, 2016

காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள் நிர்வாகி நீதிபதி கே. சம்பத் மரணம் !

அதிராம்பட்டினம், டிச-07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் எம்.கே.என் டிரஸ்ட் மற்றும் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் நிர்வாகியும், ஓய்வு பெற்ற நிதிபதியுமாகிய கே. சம்பத் (வயது 75) இன்று காலை ராயப்பேட்டை இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதி சடங்கு நிகழ்ச்சி இன்று ( 07-12-2016 ) மாலை 5 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.கே.என் டிரஸ்ட் மற்றும் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியாக கடந்த ( 06-03-2013 ) முதல் பணியாற்றி வந்தார். இக்காலக்கட்டத்தில் கல்வி நிறுவனங்களின் கல்வி வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு வசதிகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டி உள்ளார். கல்லூரியில் புதிதாக இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்சி துறைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் மகளிர் கல்விக்கு அதிக முன்னுரிமை அளித்து வந்துள்ளார். இக்கல்லூரியை தன்னாட்சி கல்லூரியாக மாற்றுவதற்கு மிகவும் ஆர்வம் கொண்டு இருந்தார்.

கல்லூரியில் கடந்த மாதம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசியது இவர் கல்லூரியில் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பற்றிய சிறு குறிப்பு:
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி கே.சம்பத் கடந்த 1941 -ஆம் ஆண்டு, ஜூலை 6 -ஆம் தேதி பிறந்த இவர், சட்டப்படிப்பை முடித்து, 1966 -ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். சிவில், வங்கி தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்தார்.

இதையடுத்து, கடந்த 1996 -ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.சம்பத், 2003 -ஆம் ஆண்டு ஜூலையில் பணி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னர், சென்னை ராயப்பேட்டை ஜெகதாம்மாள் காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு, ஹேமா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது மனைவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.

2004-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 96 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி கே.சம்பத் தலைமையில் தமிழக அரசு விசாரணை கமி‌ஷன் அமைத்தது. நீதிபதி கே. சம்பத், விபத்து குறித்தும், எதிர் காலத்தில் இதுபோல கொடூர சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்கவும் பல பரிந்துரைகளை அறிக்கையாக தயார் செய்து அப்போதைய தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தனர்.

நீதிபதி கே சம்பத் அவர்கள் கல்லூரியில் நடந்த நிகழ்சிகளில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட படங்கள்:
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...