Pages

Thursday, December 8, 2016

ஜெ. இரங்கல்: அதிரையரின் கவிதைகள் !

இரங்கட்பா
-- -- -- -
தமிழகத்தின் உயிர்!
தக்கவைத்துப்
பன்முறைகள் அரியணையில்
பசுமை ஆட்சி ஓட்சிய
முதலமைச்சர்!
சரித்திர வீராங்கனைகளுக் கெல்லாம்
தலைமை யேற்று
சரித்திரம் படைத்து
வீர முத்திரைப் பதித்த
வீராங்கனை!
எந்தநாடும் ஒருபெண் இத்தனை முறை
ஏற்றுத் தலைமை வகித்ததை
எடுத்துரைக்க முடியாது!
ஏழை எளியவர்க்கு
ஆதரவாய் ஆன
அம்மா!
தங்களை இழந்த
தமிழக மக்களின்
கோடான கோடி உள்ளங்கள்
அலை கொந்தளிக்கும் கடல் ஆனது!
அடங்காப் பீரிட்டழும் கண்கள்
காவிரியை உருவாக்கிவிட்டது!
எல்லோரையும் சமமாக நடத்தி
இனிதே ஆண்டீர்கள்!
தங்கள் பிரிவு
எல்லா சமூகத்தவரின்
உள்ளங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது!
மறக்கமுடியா சரித்திரம் படைத்தஅம்மா!
தங்கள் ஆத்மா
சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்!
கவிஞர் மு. முஹம்மது தாஹா

ஆளுமுன் திறனில் சிங்கம்
    ஆங்கிலப் புலமைத் தங்கம்
சூளுமுன் பகையில்  வீரம்
   சூதுகள் வெல்லும் தீரம்
வாளென உரையில் வீச்சு
    மாண்டது இன்றுன் மூச்சு
நாளெலாம் நினைவில் வென்றாய்
    நாடெலாம் புகழச் சென்றாய்!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

சாதனை வருதல் சிலரில்தான்
**********************************
நாளும் இரும்பு பெண்மணியாய்
நாட்டை ஆண்டாய் முதல்வராய்
கேள்வி பட்டோம் சரித்திரத்தில்
கேட்டும் கண்டும் கொண்டோமே
ஆளப் பிறந்த அம்மாவாய்
அனைவர் வாயில் அம்மாதான்
மூளும் எதிர்ப்பு எதுவாகின்
முடித்தாய் வென்றே சாதித்தே !

இன்று இந்திய தலைவர்கள்
எல்லாம் இறுதி மரியாதை
என்று இங்கு அணிவகுப்பு
எங்கள் மனமும் பரிதவிப்பு
அன்று என்றே உன்வாழ்வும்
அச்சு பதிவில் ஆகிறதே
ஒன்று மட்டும் சொல்வதென்றால்
ஒன்றாய் தனித்தே நின்றாயே !

உலகோர் அறிந்தார் ஜெயலலிதா
உந்தன் பெயரோ கோமளவள்ளி
நலமாய் ஜெய்ராம் வேதவள்ளி
நங்கை அவரில் பிறந்தீரே
வலமாய் நடிப்பில் உயர்ந்தீரே
வலிமை உள்ளம் கண்டோமே
தலமை பொருப்பில் தனிநிகராய்
தமிழ கம்ஆண் டாய்திறனாய்

உணவு மதியம் பள்ளிகளில்
உண்ணத் தந்தார் காமராஜூம்
கணக்காய் ! அம்மா உணவகமும்
காசு குறைவில் எல்லோர்க்கும்
இணக்கம் தந்தார் அம்மாவும்
இனாமாய் அரிசி ஏழைக்கும்
மணக்கும் அவரின் தைரியமும்
மணியாம் பெண்கள் வரிசைகளில்

பிரிவு என்றால் கலக்கம்தான்
பிறவி பெற்றோர் வழக்கம்தான்
சரிவு வருதல் இயற்கைதான்
சாதனை வருதல் சிலரில்தான்
வரிசை பெறுவார் திறனில்தான்
வாழ்த்து வருதல் விரும்பிதான்
புரிந்து வாழ்தல் சமத்துத்தான்
புகழில் நிலைத்தல் சவாலுதானே !
ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...