Pages

Saturday, December 3, 2016

துபாயில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொண்டாடிய அமீரக தேசிய தினம் !

துபாய்: டிச-03
துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் அமீரகத்தின் 45-வது தேசிய தினம் வெகு உற்சாகமாக 02.12.2016 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை ஸாபில் பூங்காவில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர்.

வருடந்தோறும் ஈமான் அமைப்பு அமீரகத்தில் வசித்து வரும் தமிழ் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து சந்திப்பு நிகழ்விற்கு ஏற்பாடுகளைச் செய்வதுடன் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்கி வருகிறது

ஈமான் கல்சுரல் செண்டரின் தலைவர் அல்ஹாஜ் பி. எஸ். எம் ஹபிபுல்லா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்திராக வேலூர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், டிடிஎஸ் ஈவெண்ட் தலைவி சமூக சேவகர் டாக்டர் ஜெயந்தி மாலா சுரேஷ், மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவரும் வயது வித்தியாசம் இன்றி இந்த போட்டியில் பங்கேற்றது மனதுக்கு மகிழ்ச்சியினை அளித்தது.

ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, ஆலியா முகம்மது நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நாகூர் ஷேக் தாவூது, வெஸ்டர்ன் ஆட்டோ நிறுவனத்தின் இயக்குநர் கமால், தமிழ் 89.4 எப்.எம்.-ன் சக்தி ராம், இளையான்குடி அபுதாஹிர், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக், பாபநாசம் அப்துல் ஹமீது,  உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விலையுயர்ந்த டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வழங்கப்பட்டன.

போட்டிகளை சிறப்புடன் நடத்த உறுதுணையாக இருந்த ஜெசிலா ரியாஸ் மற்றும் குழுவினர் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த நிறுவனங்களுக்கும் நினைப்புபரிசு வழங்கப்பட்டது.

துணைத் தலைவர் மஹ்ரூப் காக்கா  நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் மதிய உணவு, ஜூஸ், சமோசா, டீ உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முகம்மது மஹ்ரூப்,  அஷ்ரப் அலி, ரவூப் அலி, முகைதீன் அப்துல் காதர், முதுவை ஹிதாயத், திண்டுக்கல் ஜமால் முகைதீன், பைசுர் ரஹ்மான், காதர், உஸ்மான், யாக்கூப், ஈஸா, இக்பால், காமில், பரக்கத் அலி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அம்ஜத் கான், முஸ்தபா, மெரிட்கான், ஹலீம், இல்யாஸ் உள்ளிட்ட குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடப்பதற்கு அரேபியா ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஆலியா முகம்மது டிரேடிங், சூப்பர் சோனிக் பேஷன்ஸ், மஸ்ரிக் இண்டர்னேசனல் டிபிஎஸ் ஷிப்பிங், அப்துல்லா டைப்பிங் செண்டர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆதரவு அளித்தன. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. பிறந்த தாய்நாட்டையும் வாழ்வளிக்கும் நாட்டையும் நாம் நேசிக்க வேண்டும்., இப்போ உற்சாகமாக கொண்டாடும் அதே நேரத்தில் இந்திய குடியரசு தினம் சுதந்திர தினம் கொண்டாட வாழும் நாட்டில் ஏற்பாடு செய்ய வேண்டும் இல்லையேல் அமைதியாக இருந்திடல் நல்லது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...