Pages

Thursday, December 8, 2016

கால்நடைகள் ஏலம் !

கால்நடை பெருக்கு பண்ணையில் ஏலமிடப்படும் கால்நடைகளின் விவரம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளதாவது:
உயரின கால்நடை பெருக்கு பண்ணை, ஈச்சங்கோட்டையில் பண்ணை உபயோகத்திற்கு போக கழிவு செய்யப்பட்ட 7 கால்நடைகள் வருகின்ற 16.12.2016 அன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் பண்ணை வளாகத்தில் பொது ஏலம் விடப்படப்படவுள்ளது. 6 கலப்பின பொலிகாளை ஜெர்சி, 1 எருமை பொலி காளை என 7 கால்நடைகள் பொது ஏலம் விடப்படவுள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் டேவணித்தொகையாக ரூ.25000க்கான பாரத மாநில வங்கியில்  Deputy Director, ECBF, EKT என்ற பெயருக்கு பெறப்பட்ட வங்கி வரைவாக டேவணித் தொகை மற்றும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கொடுத்து வருகின்ற 15.12.2016 பிற்பகல் 5.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  5 மணிக்கு மேல் ஏலத்தில் கலந்து கொள்ள பதிவுகள் மேற்கொள்ளப்படமாட்டாது.

15.12.2016 தேதிக்குள் டேவணித்தொகைக்கு வரைவோலை கொடுத்து பதிவு செய்தவர்கள் மட்டுமே 16.12.2016 அன்று நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.  ஏலம் எடுத்தவர் ஏலம் எடுத்தவுடன் ஏலம் கோரிய முழு தொகையையும், ரொக்கமாக செலுத்திட வேண்டும்.  அவ்வாறு செலுத்த தவறினால், அவரால் செலுத்தப்பட்ட டேவணித் தொகையை இழக்க நேரிடும்.  ஏலம் முடிந்தவுடன் ஏலம் எடுத்த ஏலதாரர்கள் தவிர ஏலத்தில் கலந்து கொண்ட இதர நபர்களின் டேவணி தொகைக்கான வங்கி வரைவு திருப்பி கொடுக்கப்படும்.  ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக முழுதொகையையும் ரொக்கமாக செலுத்தி அன்றைய தினமே கால்நடைகளை பெற்றுச் செல்ல வேண்டும்.

ஏலம் நடைபெறவுள்ள இரண்டு தினங்களுக்கு முன்பு முதல் ஏலமிடப்படவுள்ள கால்நடைகளை பணி நேரங்களில் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...