Pages

Friday, December 9, 2016

துபாய் டேக்ஸிக்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி துவக்கம்!

அதிரை நியூஸ்: துபாய், டிச-09
பரீட்சார்த்த முறையில் சில டேக்ஸிக்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு சோதனைகள் வெற்றியடைந்ததை தொடர்ந்து துபையில் இயங்கும் சுமார் 9500 டேக்ஸிக்களிலும் தலா 3 மினி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தும் பணி துவங்கியது, இப்பணி 2018 ஆம் அண்டிற்குள் நிறைவுறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக துபை போக்குவரத்துத் துறை {RTA} அறிவித்துள்ளது.

டேக்ஸி பயணிகளின் தனியுரிமை {Privacy) பாதிக்கப்படாத வகையில் பொருத்தப்படும் இந்தக் காமிராக்களில் ஒன்று முழுமையாக டிரைவரை மட்டுமே கண்காணிக்கும் மற்ற இரண்டும் டேக்ஸியின் முன்புறமும் பின்புறமும் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் டேக்ஸி டிரைவர்கள் பயணிகளுடன் நடந்து கொள்ளும் போக்கும் அவர்களின் பணிச்சோர்வும் கண்காணிக்கப்படுவதுடன், டிரைவர்கள் மீது பயணிகள் சுமத்தும் புகார்களை ஆராயவும் பயன்படும் என்பதால் இது இருவரின் மீதான நம்பகத்தன்மைக்கும் சாட்சியாய் அமையும்.

இத்தகைய கேமிராக்கள் பொருத்தப்பட்ட டேக்ஸிக்கள் ஏற்கனவே அபுதாபியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...