Pages

Tuesday, December 13, 2016

அதிரையில் வலம் வரும் ஓர் புல்லட் ராணி !

காற்றில் ஜிவ்சென்று ஒரு கெச்சலான உருவம் பறந்து செல்வதைப் போன்ற உணர்வு, சற்றே கூர்ந்து பார்த்தால் ஒரு இளம்பெண் மோட்டார் பைக் ஓட்டிச் செல்வதை காண முடிகிறது. அதிரை போன்ற சிறுநகரங்களுக்கு இது பேராச்சரியம் தான் என்றாலும் ஒரு வருடமாக இப்படி வலம் வருகிறாராம்.

அதிரை, பழஞ்செட்டித்தெருவை சேர்ந்த சகோதரர் குணசேகரன் அவர்களின் மகள் துர்கா என்பவர் தான் இந்த கியர் பைக் ஒட்டும் இளம்பெண். துறுதுறு பெண்ணான துர்கா தன்னுடைய தந்தையின் பைக்கை எடுத்து சுயமாக பயின்று கடந்த ஒரு வருடமாக அதிரைக்குள் குடும்பத்தின் சுய தொழில் நிமித்தம் வலம் வருகிறார்.

தங்கச்சி ஒரு பேட்டி என்றவுடன் அதுவரை இல்லாத நாணமும் பயமும் படபடப்பும் தொற்றிக்கொள்ள தைரியமாக கனரக இருசக்கர வாகனமான 'கியர் பைக்' ஓட்டுகின்ற பெண்ணா இது என நம்மையே குழப்பம் காணச்செய்கின்றது.

நமதூரில் பெண்கள் அதிலும் கோஷா பெண்கள் கூட இலகுரக இருசக்கர வாகனங்களான டிவிஎஸ், ஸ்கூட்டி போன்ற மொபெட்டுகளில் வலம் வரும் போது இந்த துர்கா அவர்களிலிருந்து தனித்தே தெரிகின்றார் அதுவும் குடும்பத்திற்கு உழைக்கும் பெண் எனத் தெரிகின்றபோது கூடுதல் மரியாதை வருகின்றது. சிலவேளைகளில் மட்டும் அவர் தம்பி சக்திவேலும் பின் சீட்டில் அக்காவுக்கு துணையாக.

எல்லாம் சரி பெற்றோர்களே! 
ஒரு பெண்ணை போற்றுகின்ற அதேவேளையில் உங்களிடம் ஓர் வேண்டுகோள். தயவுசெய்து உங்களது மைனர் குழந்தைகளை இருசக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிக்காதீர், வாங்கித் தராதீர். ஏனெனில் பைக்குகளை விட, அதை ஓட்டுவதை விட உங்கள் குழந்தைகளின் உயிர் உன்னதமானது.

கடந்த ஒரு வருடமாக அதிரையில் தினந்தோறும் பலரும் பார்த்து வரும் நிகழ்வை பார்க்காதவர்களுக்கும் ஒரு செய்தி என்ற வடிவில் தருவது மட்டுமே இப்பதிவின் நோக்கம் எனக்கூறி நிறைவு செய்கின்றோம்.

J. ஆசிக் அஹமது

1 comment:

  1. எல்லாத்துறையிலும் பெண்கள் சாதிக்கக்கூடியவர்கள் தான் இதில் மதம் ஒரு தடையல்ல ஆனால் அவர்களுக்கு கொடுக்கும் நம்பிக்கை - தைரியம்; இருந்தாலும் சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும் இல்லையேல் ஒரு கண்ணோட்டத்தோடு பார்க்கப்படுகிறது. நம்மபிள்ளைக்கு இதெல்லாம் சரிவராதுங்க என்று சொல்லியே அவர்களின் ஆர்வத்தை குழிதோண்டி புதைத்து விடுவதோடு மற்றவர்களை ஓகோன்னு சொல்லுறோம்..முதலில் சைக்கிள் ஒட்ட முடியுதா ? பிறகு எப்படி வீராங்கனையாக சமுதாயத்தில் வரமுடியும்?சானியா போல் வரணும் என்று சிலருக்கு ஆசை; சொன்னா சாணி கரைச்சி அடிப்பாங்க. சகோதரிக்கு; உங்கள் வண்டி ஓடுவதுப்போல் உங்கள் வாழ்க்கையும் ஓடட்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...