Pages

Monday, January 9, 2017

துபாயில் 1 மணிநேரத்தில் 19 போக்குவரத்து குற்றங்கள் ஏற்படுத்திய பெண் !

அதிரை நியூஸ்: துபாய், ஜன-09
பொதுவாக, ஆண் ஓட்டுனர்களால் ஏற்படும் வாகன விபத்தைவிட பெண் வாகன ஓட்டுனர்களால் ஏற்படும் வாகன விபத்துக்களின் சராசரி அதிகம் என்றும் பெண் ஓட்டுனர்கள் மிக வேகமாக பதட்டமடைய கூடியவர்களாக இருப்பதுவே இதன் பிரதான காரணமென்றும் என்று துபை போக்குவரத்து காவல்துறையின் சான்றுகள் கூறுகின்றன.

துபையில் ஐரோப்பிய பெண் ஓட்டுனர் ஒருவர் 1 மணிநேரத்தில் மணிக்கு 220 முதல் 240 வரை வாகனத்தை மிக மிக அதிவேகமாக செலுத்தியதால் 19 முறை ரேடார் காமிராவில் சிக்கியுள்ளார், இப்படி ஒரு போக்குவரத்து விதிமீறல் குற்றம் துபையில் அதிகளவில் நடந்துள்ளது இதுவே முதன்முறை.

பொதுவாக 120 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றாலே ஒருமுறைக்கு 1000 திர்ஹம் அபராதம், 2 முதல் 3 மாதங்கள் வரை வாகனம் சிறைபிடிக்கப்படும் மேலும் டிரைவர் லைசென்ஸ் மீது 12 கரும்புள்ளிகள் விழும், இந்த தண்டனைகளை தற்போது 19ஆல் பெருக்கிக் கொள்ளவும்.

ஷேக் ஜாயித் ரோட்டில் நிகழ்த்தப்பட்ட இந்த குற்றம் குறித்து அப்பெண்ணிடம் போலீஸார் விசாரித்த போது, மருத்துவமனைக்கு செல்வதற்காகவும் மன அழுத்தத்திற்கு உள்ளானதாலும் வேகமாக வாகனம் ஓட்டியதாக கூறினார் என்றாலும் அவரது விளக்கத்தை ஏற்க போலீஸார் மறுத்துவிட்டனர்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...