Pages

Sunday, January 15, 2017

இந்தியாவில் 1000 ஆண்டுகால 80 கி.மீ தூர நெடுஞ்சுவர் கண்டுபிடிப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜன-15
இந்தியாவின் இதயப் பகுதி போன்று விளங்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் சுமார் 80 கி.மீ தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள சுமார் 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, இதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாமலிருந்த சுவர் குறித்த செய்திகள் பார்மஸிஸ்ட் ராஜிவ் சவ்பே, சுக்தேவ் மஹராஜ், நாராயண் வியாஸ் என்கிற முன்னாள் அகழ்வராய்ச்சி ஊழியர், ராகவேந்திர காரே போன்ற தன்னார்வ குழுவினரால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சுவர் குறித்த எந்த ஆதாரப்பூர்வமான வரலாற்றுச் செய்திகளும் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும் கற்பனைகளும் அனுமானங்களும் கொடிகட்டி பறக்கின்றன. பார்மர் அரசவம்ச (Parmar Kingdom) காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

இந்த சுவர் நெடுக பல இடங்களில் சிலைகளின் சிதிலங்கள், கோயில், பாம்பு போன்ற வடிவங்கள் காணக்கிடைக்கின்றன. பல இடங்களில் வளைந்தும் நெளிந்தும் செல்லும் இந்த சுவர் சீனப்பெருஞ்சுவர் போன்றே அந்நிய படையெடுப்பை தடுப்பதற்காக எழுப்பப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது ஏனெனில் இச்சுவற்றுடன் உள்ள பல பகுதிகள் பழங்கால வீரர்கள் மறைந்திருந்து தாக்க உகந்த வகையில் காணப்படுகின்றன.

இந்த சுவர் கோரக்பூர், டியோரி, சொக்கிகார்க், செயின்பூர் பர்தி, போபால், ஜபல்பூர் போன்ற நகரப் பகுதிகள் மற்றும் பல கிராமங்கள் வழியாக சென்று அடர்ந்த காட்டுக்குள் நீள்கின்றன, இடையில் அணைக்கட்டுப் பகுதியில் துண்டாடப்படும் சுவர் பின்பு மறுகரையிலும் காணப்படுகின்றது. இந்த கிராம மக்களை பொருத்தவரை இது 'திவால்' (Diwaal) என அழைக்கப்படுவதுடன் தொக்கி நிற்கின்றது.

தன்னார்வலர் ராஜிவ் சவ்பே கூறும் பொழுது, நாம் தற்பொழுது தரையை தான் லேசாக கீறி பார்த்துள்ளோம் முறையாக அகழ்வாய்ந்தால் பல வரலாற்று உண்மைகளும், மர்மங்களும் வெளிவரும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வு மத்திய அரசின் பழிவாங்கும் போக்கால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவது போல் அல்லாமல் சீனப்பெருஞ்சுவருக்கு அடுத்த பெரும் சுவராக கருதப்படும் இந்த ராய்சன் மாவட்ட (Raisen District) சுவரை முறையாக அகழ்வாய்வு செய்ய முன்வர வேண்டும்.

Source: Hindustan Times
தமிழில்: நம்ம ஊரான்

3 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...