Pages

Saturday, January 7, 2017

'மர மனிதன்' என்றழைக்கப்பட்ட நபருக்கு 16 முறை அறுவை சிகிச்சைகள் !

அதிரை நியூஸ்: ஜன-07
உலகின் மிக அரிதாக பீடிக்கும் நோய்களில் ஒன்றான epidermodysplasia verruciformis என்ற மரபணு கோளாறால் ஏற்படும் நோய் இதுவரை உலகில் 4 பேருக்கு மட்டுமே பீடித்துள்ளதாக மருத்துவ உலகம் கூறுகின்றது. இந்த நோய் வந்தவர்களின் கை, கால்களில் மரக்கிளைகள் போல் திடீர் என முளைப்பதால் இவர்களை 'மர மனிதன்' (Tree Man) என்றும் அழைக்கின்றனர்.

கடந்த வருடம் இந்த அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பங்களதேஷ் நாட்டின் ரிக்ஷா தொழிலாளி 'அபுல் பஜந்தர்' (வயது 27) என்பவரைப் பற்றி அறிந்த 'டாக்கா மருத்துவக் கல்லூரியின்' மருத்துவர் சமந்தலால் சென், அபுல் பஜந்தருக்கு சிகிச்சையளிக்கத் துவங்கினார். ஒரு வருடத்தில் மொத்தம் இதுவரை 16 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 5 கிலோ அளவுக்கு கையிலும் காலிலுமிருந்த கூடுதல் சதை வளர்ச்சிகள் அகற்றப்பட்டன.

சுமார் ஒரு வருட நீண்ட சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ள அபுல் பஜந்தருக்கு இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாகவே செய்யப்பட்டன. மேலும், உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் நல்லுள்ளங்கள் செய்த பொருளாதார உதவியால் ஒரு வருட குடும்ப செலவை தாக்குப்பிடித்ததுடன், சிகிச்சை முழுமையடைந்து வீடு திரும்பிய பின் சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் நடத்தவுள்ளார் என்பதையெல்லாம் விட தன்னுடைய குழந்தையை மீண்டும் மடியில் அமர்த்தி கொஞ்ச முடியும் என பூரிக்கின்றார்.

கடந்த வருடம் தான் இதுபோன்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இந்தோனேஷியர் ஒருவர் மரணமடைந்திருக்கும் நிலையில் குணப்படுத்த போராடிய மருத்துவர் சமந்தலால் சென் அவர்களுக்கும், குணமடைந்த அபுல் பஜந்தருக்கும், உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...