Pages

Friday, January 6, 2017

விலையில்லா ஆடு, மாடு வழங்க பயனாளிகள் தேர்வு: ஜன.18,19,20 ல் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் !

தமிழக அரசின்  2016-2017ம் ஆண்டு டிசம்பர் 2016. ஜனவரி 2017 மற்றும் பிப்ரவரி 2017 ஆகிய மாதங்களுக்கு விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் - செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் விபரங்களை அனைத்து மக்களும் அறியும் வண்ணம் விளக்கி கூறிடவும் விருப்பமுள்ள பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றிடவும் வருகிற 11-01-2017, 12-01-2017, 13-01-2017 ஆகிய தேதிகளிலும், மற்றும் பயனாளிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை இறுதி செய்து கிராமச்சபையில் வைத்து ஒப்புதல் பெற்றிட 18-01-2017, 19-01-2017, 20-01-2017 ஆகிய தேதிகளில்
கீழ்க்காணும் கிராம ஊராட்சிகளில்  சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

டிசம்பர் 2016, ஜனவரி 2017 மற்றும் பிப்ரவரி 2017 மாதங்களில்
தமிழக அரசின் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் - செம்மறி ஆடுகள் வழங்கிட தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளின் விபரப்பட்டியல்:
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னப்பன்பேட்டை, ஆலங்கடி. அகரமாங்குடி ஆகிய ஊராட்சிகளிலும், பூதலுர் ஊராட்சி ஒன்றியம், அலமேலுபுரம், ஆற்காடு, அகரப்பேட்டை ஆகிய ஊராட்சிகளிலும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம். அண்ணலக்ரஹாரம். ஆரியபடைவீடு, அணைக்குடி, அகரத்தூர் ஆகிய ஊராட்சிகளிலும், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம், அண்டமி, ஆலம்பள்ளம் ஆகிய ஊராட்சிகளிலும், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம், ஆம்பலாப்பட்டு வடக்கு, அருமுலை, சின்னப்பொன்னாப்பூர், ஆதனக்கோட்டை, ஆவிடநல்லவிஜயபுரம், ஆழிவாய்க்கால். பாபநாசம் ஊராட்சி ஒன்றியம். சக்கராப்பள்ளி, கணபதி அக்ரஹாரம். ஆதனுர், கோபுராஜபுரம், அலவந்திபுரம் ஆகிய ஊராட்சிகளிலும். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம். ஆத்திக்கோட்டை. ஏனாதி. ஏரிப்புறக்கரை. அணைக்காடு. கழுகுபுலிக்காடு. சுந்தரநாயகிபுரம் ஆகிய கிராம ஊராட்சிகளிலும். பேராவூரணி ஊராட்சி ஒன்றியம். அலிவலம். அம்மையான்டி. இடையாத்தி ஆகிய ஊராட்சிகளிலும். சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம். ஆண்டிக்காடு. சொக்கநாதபுரம். அடைக்கத்தேவன் ஆகிய கிராம ஊராட்களிலும். தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம். கல்விராயன்பேட்டை, கண்டிதம்பட்டு, காட்டு்ர், கொண்டவிட்டான்திடல். ஆலக்குடி, கவல்லுண்டான்பட்டு, கடகடப்பை, கூடலூர், சித்திரக்குடி ஆகிய ஊராட்சிகளிலும். திருவையாறு ஊராட்சி ஒன்றியம், அம்பதுமேல்நகரம். அம்மையகரம். ஆவிக்கரை, கடுவெளி, அள்ளு்ர் ஆகிய கிராம ஊராட்சிகளிலும், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம். இளந்துறை. ஏனாநல்லுர், கோவிந்தபுரம், இஞ்சிக்கொல்லை, ஆவணியாபுரம், கூகூர், அம்மன்குடி ஆகிய கிராம ஊராட்சிகளிலும், திருவோணம் ஊராட்சி ஒன்றியம். அம்மன்குடி. காடுவெட்டிவிடுதி, காரியாவிடுதி, காவாளிப்பட்டி, அதம்பை ஆகிய கிராம ஊராட்சிகளிலும், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம். சிதம்பரநாதபுரம், அணைக்கரை. ஆரலூர். கீழசூரியமூலை, மணிக்குடி ஆகிய கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளன.

11-01-2017, 12-01-2017, 13-01-2017 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ள கூட்டத்திற்கான பொருள்:
“2016-2017ம் ஆண்டு டிசம்பர் 2016, ஜனவரி 2017 மற்றும் பிப்ரவரி 2017 ஆகிய மாதங்களுக்கு  “தமிழக அரசின் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள்-செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்படும்; விபரங்களை அனைத்து மக்களுக்கும் விளக்கிக் கூறுதல் மற்றும் அத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெறுதல்”.

18-01-2017, 19-01-2017, 20-01-2017 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ள கூட்டத்திற்கான பொருள்:
“2016-17 ம் ஆண்டு தமிழக அரசின் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் - செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் டிசம்பர் 2016. ஜனவரி 2017 மற்றும் பிப்ரவரி 2017 ஆகிய மாதங்களுக்கு  கிராம அளவிலான குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் பட்டியலை 18-01-2017, 19-01-2017, 20-01-2017 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபையில் வைத்து அங்கீகரித்தல்”

மேற்காணும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில், அவ்வூராட்சியைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் - செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும். விருப்பமுள்ள பயனாளிகள் விண்ணப்பங்களை அளித்து கிராம சபைக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கவும். கிராம மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...