Pages

Saturday, January 14, 2017

கடத்தப்பட்ட குழந்தை 18 ஆண்டுகளுக்குப்பின் கண்டுபிடிப்பு !

அதிரை நியூஸ்: ஜன-14
1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஜாக்ஸன்வில்லி மருத்துவமனையிலிருந்து பிறந்த பச்சிளம் குழந்தை நர்ஸ் வேடமிட்டு வந்த பெண்ணால் கடத்தப்பட்டதை தொடர்ந்து போலீஸார் தேடிவந்தனர்.

சுமார் 2,500க்கு மேற்பட்ட வழக்கு தொடர்புகள் மற்றும் தடங்களை பின்தொடர்ந்த போலீஸார் இறுதியாக 18 வயது பருவப் பெண்ணாக அக்குழந்தையை மீட்டதுடன் மரபணு சோதனைக்குப் பின் உறுதிசெய்யப்பட்ட பெற்றோருடன் சேர்க்கப்பட்டார் ஆனாலும் கடத்திய பெண்ணையே தனது தாயாக நினைத்தே இதுவரை வளர்ந்துள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை கடத்திய 51 வயது பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட குழந்தையின் மனநிலை கருதி அவருடைய புகைப்படத்தை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர்.

சமீபத்தில் நம் தமிழகத்தில் கூட குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு பெண் பிள்ளை பாசத்தால் மருத்துவமனையிலிருந்து ஒரு குழந்தை கடத்திச் சென்றதும் பின்பு அவர் சிசிடிவி உதவியால் பிடிபட்டாலும் அவரை போலீஸார் மனிதாபிமானத்துடன் மன்னித்து அனுப்பியதும் நினைவுகூறத்தக்கது.

Source: Sky News / Msn
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...