Pages

Wednesday, January 25, 2017

அமீரகத்தில் சந்தர்ப்பவச சிறைவாசிகளை விடுதலை செய்ய 1 மில்லியன் டாலர் உதவி!

அதிரை நியூஸ்: ஜன-25
அமீரகத்தில் பல கிளைகளுடன் Pure Gold Jewellers என்ற பெயரில் நகைக்கடைகளை நடத்தி வரும் இந்திய வணிகர் பிரோஸ் மெர்ச்சண்ட் (Firoz Merchant), இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சில தவிர்க்க முடியாத சூழல்களால் கடனை அடைக்க முடியாமல் சிறையில் வாடும் வெளிநாட்டவர்களின் கடனை அடைத்து அவர்களை விடுவித்து நாட்டுக்கும் அனுப்பி வருகிறார். தன்னுடைய இந்த பொதுத் தொண்டிற்கு 'மறக்கப்பட்ட சமூகத்திற்கான மறுவாழ்வு திட்டம்' (Forgotten Society Programme) எனப் பெயரிட்டுள்ளார்.

இந்த வருடம், சந்தர்ப்ப சூழ்நிலையால் கடன் ஏற்பட்டு சிறையினுள் வாடும் வெளிநாட்டவர்களின் மறுவாழ்விற்காக 1 மில்லியன் டாலர் (சுமார் 3.6 மில்லியன் திர்ஹம்) அளவுக்கான உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளார். அதன்படி, 2017 ஆம் ஆண்டின் முதற்குழுவாக அஜ்மான் சிறையில் இருந்து 132 பேர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பவுள்ளனர். இவர்களின் மொத்த கடன்தொகையில் 150,000 திர்ஹம் அளவுக்கு நேர் செய்யப்பட்டது.

இந்த 132 பேர் கொண்ட முதற்குழுவில் இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீ லங்கா, நேப்பால், எத்தியோப்பியா, சிரியா, ஏமன், ஓமன் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறை மீள உள்ளனர்.

திடீர் என வேலை இழத்தல், வியாபாரத்தில் நஷ்டமமைதல் மற்றும் எதிர்பாரா விதத்தில் கடனை சுமக்க நேரிடுதலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் (job loss, business downturn or other reasons beyond their control) குறித்து சிறை அதிகாரிகள் தரும் ஊர்ஜிதமான பரிந்துரையின் கீழ் மட்டும் தலா நபர் ஒருவருக்கு 30,000 திர்ஹம் என ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் விமான டிக்கெட் மற்றும் ஊர் சென்று சேரும் வரையிலான உள்ளூர் செலவுகள் வரை பிரோஸ் மெர்ச்சண்ட் ஏற்றுக்கொள்கிறார். நேரடி விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லையும், கிரிமினல் செயல்களில் ஈடுபட்டவர்கள், திட்டமிட்டு ஏமாற்றியவர்களுக்கும் உதவிகள் கிடையாது.

2017 ஆம் ஆண்டை அமீரக அரசு ' வழங்கி மகிழும்' ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், பிற வணிகர்களும் இதுபோன்ற திக்கற்ற, சந்தர்ப்ப சூழலால் சிறை செல்ல நேரிட்டவர்களை மீட்க முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...