Pages

Wednesday, January 25, 2017

அமெரிக்காவில் 20 மில்லியன் டாலர் பண மெத்தை பிடிபட்டது !

அதிரை நியூஸ்: ஜன-25
இந்தியாவில் 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சில இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு பதுக்கப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டு கட்டுக்களை பெட்டி பெட்டியாக அள்ளி வந்தனர், இதை வைத்து சமூக வலைத்தளங்களில் செயல்படும் மீம்ஸ் கிரியேட்டர்கள் 'பணத்த ரெட்டி வீட்ல பாத்திருப்பே, ராவ் வீட்ல பாத்திருப்பே, பீஜேபிகாரன்க வீட்ல பாத்திருப்பே ஆனா ஏடிஎம்ல பாத்திருக்கியா, பாத்திருக்கியா? என சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவை டிரோஸ் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டதை படித்திருப்போம்.

அமெரிக்கா, மஸ்ஸாசூசெட்ஸ் நகரில் தங்கியிருந்த பிரேசில் நாட்டவர் ஒருவரிடமிருந்து படுக்கை மெத்தைக்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் டாலர்கள் கட்டுக்களை கைப்பற்றியுள்ளனர். மெத்தைக்கு அடியில் பணத்தை பதுக்கும் இந்த பழைய டெக்னிக் ஏற்கனவே பலரும் செய்த ஒன்று தான், விபரம் கீழே.

இந்தப் பணம் அனைத்தும் பல மில்லியன் டாலர் அளவில் நடைபெற்ற 'பிரமீட் திட்டம்' எனும் மோசடியின் மூலம் திரட்டப்பட்டதாகும். இந்த மோசடியில் ஈடுபட்ட ஜேம்ஸ் மெர்ரில் என்ற நபர் கனடா வழியாக பிரேசிலுக்கு தப்பிச் சென்றுவிட பணத்தை கடத்தும் கூரியர் ஆளாக செயல்பட்ட ஜேம்ஸின் நண்பர் கிளபர் ரோச்சா என்பவர் மட்டும் பிடிபட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறை தண்டனை நிச்சயம். இன்னும் கூட கிரேட்டர் போஸ்டன் பகுதியில் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தகவலுக்காக மட்டும்:
மிக சமீபத்தில் 2000 ரூபாய் பணக்குவியலின் மீது படுத்துப் புரளும் புகைப்படம் ஒன்றை ஒருவன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்ததை பார்த்திருப்பீர்கள். இவனுக்கு முன்பாக, இலங்கையில் ஜேவிபி எனும் சிங்கள பயங்கரவாத இயக்கத் தலைவன் 'ரோஹன விஜயவீர' என்பவன் 1989 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இலங்கை ராணுவத்திடம் பிடிபடும் போது. அவனது படுக்கையின் கீழும் ஏராளமான பணமும் தங்கமும் பதுக்கிவைத்திருந்ததாக செய்திகள் வெளியாகின.

தமிழகத்திலும் 'மெய்வழிச்சாலை' எனும் பெயரில் ஒரு ஆசிரமம் அமைத்து முஸ்லீம்களையும், ஹிந்துக்களையும், கிருஸ்தவர்களையும் 'சாவு இல்லாத வாழ்வு' என்ற பெயரில் ஒருசேர ஏமாற்றி வந்த முர்த்தத் ஒருவன் 1976 ஆம் ஆண்டு சாவு அவனையும் தழுவும் போது, அவனது படுக்கையின் கீழிலிருந்து ஏராளமான பணத்தையும், தங்கத்தையும் கைப்பற்றிய வரலாறுகள் போல் படுக்கைக்குள் பணம் பதுக்கிய பழைய டெக்னிக் வரலாறுகள் இன்னும் பல உண்டு.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...