Pages

Thursday, January 19, 2017

துபாய் ஷாப்பிங் திருவிழாவில் 250 கிலோ தங்கக்கட்டிகள் காட்சிக்கு வைப்பு!

அதிரை நியூஸ்: ஜன-19
துபையில் நடைபெற்று வரும் வருடாந்திர துபை ஷாப்பிங் திருவிழாவை (DSF - Dubai Shopping Festival) சிறப்பிக்கும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை – 20.01.2017) ஒரு நாள் மட்டும் சுமார் 35 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள 250 கிலோ தங்க பாளங்களை (250 KG GOLD BARS) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கவுள்ளனர்.

துபையிலுள்ள மால் ஆப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates) வளாகத்திலுள்ள ஜம்போ ஸ்டோரில் (Jumbo Stores) காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் இந்த தங்க பாளங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்தப் படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் என்ற  #jumboisgold ஹேஷ்டேக்குடன் பதிபவர்களில் ஒருவருக்கு 25,000 திர்ஹம் மதிப்புடைய தங்கத்தால் செய்யப்பட்ட 'பிளே ஸ்டேஷன் 4' பரிசாக (Dh25,000 worth of limited edition solid gold PlayStation 4) வழங்கப்படவுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...