Pages

Sunday, January 15, 2017

துபாய் விமான நிலையத்தில் மிட்டாய் தின்றவருக்கு 3 மாதம் சிறை !

அதிரை நியூஸ்: ஜன-15
வெயிட், வெயிட் சகோஸ், துபை விமான நிலையத்தில் மிட்டாய் திருடித் தின்றவருக்கு 3 மாதம் சிறை என தலைப்பை விரிவாக விளங்கிக் கொள்ளவும்.

திருடர்கள் பலவகை அதில் இந்த துபை விமான நிலையத்தில் விமானத்தில் லக்கேஜ்ஜூகளை ஏற்றும் பிரிவில் பணியாற்றி வந்த போர்ட்டர் ஒரு வகை. இவர் திருடுவதெல்லாம் பயணிகளின் பேக் ஜிப்பை திறந்து சாக்லெட் போன்ற மிட்டாய் வகைகளை மட்டுமே.

பலருடைய பேக்குகளை திறந்து மிட்டாய் வகைகளை திருடிவந்த இந்த பலநாள் 'சுவீட் கள்ளன்' ஒருநாள் சிசிடிவி வழியாக பிடிபட்டான். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இந்த மிட்டாய் திருடன் 'மை லார்ட்' நான் திருடியதெல்லாம் மிட்டாய்கள் மட்டுமே, வேறு எந்த விலை மதிப்புள்ள பொருளையும் திருடியதில்லை, திருடிய மிட்டாய்களை கூட உடனுக்குடன் தின்றுவிடுவேன் என ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டான்.

அப்புறம் 3 மாத சிறை தண்டனைக்கு பின் வேலையிழந்து நம்ம பக்கத்து நாட்டுக்கு திரும்ப வேண்டியது தான்.

Source: Syndicate.info / Msn
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. இது போன்ற Sensational தலைப்புகள் உங்கள் இணையதளம் குறித்த நல்லெண்ணம் அதிகரிப்பதற்கு உதவாது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...