Pages

Thursday, January 12, 2017

தஞ்சை மாவட்டத்தில் 4424 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி !

தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட  பள்ளிக்கல்வித் துறை மூலம்
23 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4424 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் வழங்கினார்.

தஞ்சாவூர் மேம்பாலம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  பள்ளிக் கல்வித்துறையின் மூலம் 23 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4424 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் இன்று (12.01.2017) வழங்கினார்.

வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் 23 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4422 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்  வழங்கி பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2016-2017 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. மாண்புமிகு மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு 14 வகையான விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டங்களை தொடங்கி வைத்தார்கள்.  இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் 24,258 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.  இதில் ஆண்களுக்கு 10,051, பெண்களுக்கு 14,207 வழங்கப்படவுள்ளது. இதன் மதிப்பு ரூ.9,37,39,956 ஆகும். இன்று தஞ்சாவூர் சட்ட சபைக்குட்பட்ட 23 பள்ளிகளில் பயிலும் 4424 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

மாண்புமிகு மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் கல்விக்கு கொண்டு வந்த திட்டங்கள் மூலமாக தமிழகம் கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தாலிக்கு தங்கம் கொடுக்கும் நடைபெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்பு தாலிக்கு தங்கம் நிகழ்ச்சி நடைபெறும் போது 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரையிலான பட்டதாரிகளும்ää 70 சதவிகிதம் பட்டதாரி அல்லாத பெண்களும் பயன் பெறுபவர்கள். தற்பொழுது நடைபெறும் நிகழ்ச்சிகளில் 90 சதவிகிதம் பட்டதாரி பெண்களாக உள்ளனர்.  மாண்புமிகு மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மூலம் இவை சாத்தியப்பட்டுள்ளது.  ரூ.20,000 என்று இருந்த பட்டதாரி பெண்களுக்கு உதவித் தொகையினை அம்மா அவர்கள்  ரூ.50,000 ஆக உயர்த்தி தந்தார்கள்.

மடிக்கணினி முதல் பென்சில், வரைபடம் வரை 14 வகையான உபகரணங்களை அளித்த அம்மா அரசின் திட்டங்களை பெற்று மாணவ மாணவியர்கள் வருங்காலத்தில் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராகவும், காவல் கண்காணிப்பு அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும்   வாழ்க்கையில் வளம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் அரசினர் தென்னை நாற்றங்கால் தினக்கூலியாக பணியாற்றும் தொழில் திறனற்ற பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 லிருந்து ரூ.281ம் தென்னை ஓட்டுண்ணி நிலையத்தில் பணியாற்றும் தொழில் திறன் பெற்ற பணியாளர்களுக்க நாள் ஒன்றுக்கு ரூ.350 லிருந்து ரூ.500க்கான தினக்கூலி உயர்த்தி வழங்கும் ஆணையினை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் வழங்கினார்.  தென்னை நிலையத்தில் 80,000 நெட்டை தென்னை மரக்கன்றும், 45,000 நெட்டை குட்டை தென்னை மரக்கன்றும் ஆண்டுதோறும் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), ம.கோவிந்தராசு (பேராவூரணி), வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், முன்னாள் மாநகராட்சி மேயர் திருமதி.சாவித்திரி கோபால்,  மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் ந.சுப்பிரமணியன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...