Pages

Monday, January 9, 2017

துபாயில் கார் பயணம் தவிர்ப்பு நாள் பிப்ரவரி 5 ல் அனுசரிப்பு !

அதிரை நியூஸ்: துபாய், ஜன-09
துபையில் 8 வது ஆண்டாக எதிர்வரும் 2017 பிப்ரவரி 5ல், சுற்றுச்சூழல் மாசு தவிர்ப்பு மற்றும் பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்வாக 'கார் பயண தவிர்ப்பு நாள்' (Car Free Day) அனுசரிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் இதுவரை சுமார் 1500 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்த கொள்ள உறுதியளித்துள்ளன.

கார் பயண தவிர்ப்பு நாள் அன்று, அரசுத்துறை அதிகாரி, தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைவரும் தங்களது கார் பயணத்தை தவிர்த்துவிட்டு கால் நடையாக, சைக்கிள் பயணமாக, பஸ் மற்றும் மெட்ரோ போக்குவரத்தை பயன்படுத்தியும், தனித்தனி சிறிய கார் பயணத்திற்கு பதிலாக ஊழியர்களை ஒன்றாக ஏற்றிவர பெரிய பேருந்துகளை ஏற்பாடு செய்தோ பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் இரு தினங்களாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு தற்போது ஒரு நாளாக குறைக்கப்பட்டுள்ளது என்றாலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு உகந்த பிரிதொருநாளில் தனித்தனியாக கார் பயண தவிர்ப்பு நாளை மேற்கொள்ளவும் வேண்டப்பட்டுள்ளனர். சென்ற வருடம் நடத்தப்பட்ட கார் பயண தவிர்ப்பு நாளில் சுமார் 30,000 கார்கள் இயங்காதது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...