Pages

Monday, January 30, 2017

கனடா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி?

அதிரை நியூஸ்: ஜன-30
கனடா நாட்டின் கியூபெக் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாச்சார மையம் என அழைக்கப்படும் கியூபெக் பெரிய பள்ளிவாசலில் (கனடா நேரப்படி இன்றிரவு) 8 மணியளவில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 5 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலி சம்பவத்தை ஊர்ஜிதம் செய்துள்ள போலீஸார் அதன் எண்ணிக்கையை தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கடந்த ரமலான் மாதத்தின் போதும் இந்த மஸ்ஜித் நுழைவாயிலில் பன்றியின் தலையை வெட்டிவீசி மத வெறியர்கள் தங்களின் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த நிலையில் இந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்கா ஏற்க மறுத்துள்ள அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்போம் என கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடேவ் (Justin Trudeau) அறிவித்திருந்த நிலையில் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், உலகின் எந்த நாடாவது முஸ்லீம்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் போதெல்லாம் அடுத்தடுத்த நாட்களிலேயே அந்த நாடுகளில் மிகப்பெரிய பயங்கரவாத செயல்கள் நடத்தப்பட்டு இஸ்லாமியர்கள் மற்றும் ஒரு சில தீவிரவாத குழுக்களின் மீது பழிசுமத்தப்பட்டு, முஸ்லீம்களுக்கான ஆதரவு நிலையை அந்நாடுகள் கைவிடும்படி செய்து வருகின்றனர் யூத, நஸ்ரானிய இலுமினாட்டி பயங்கரவாதிகள்.

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கனடா மக்கள் தொகையை பொருத்தவரை, 5ல் ஒருவர் அயல்நாடுகளிலிருந்து குடியேறியவர் ஆவார். மேலும் அந்நாட்டின் குடியேற்றத்துறை மற்றும் அகதிகள் நலவாழ்வுத்துறை அமைச்சராகவுள்ள அஹமது ஹூசைன் என்பவர் கூட சோமாலிய அகதி சிறுவனாக வந்து அந்நாட்டின் அமைச்சராக உயர்ந்தவர் தான்.

அமைச்சர் அஹமது ஹூசைன், கியூபெக் மாகாணப் பிரதமர் (முதல்வர்) பிலிப்பி கொல்லார்டு, கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடேவ் ஆகியோர் முஸ்லீம்களின் மீதான வன்முறை தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளதுடன் முஸ்லீம்களுக்கு தொடர் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2017 ஜனவரி ஆரம்பம் வரை சுமார் 39,670 சிரியா அகதிகளுக்கு கனடா அடைக்கலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...