Pages

Saturday, January 14, 2017

துபாயில் கிரிக்கெட் போட்டியில் அதிரை அணி 6 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது !

அதிரை நியூஸ்: துபாய், ஜன-14
துபாய் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் தொடர் போட்டி துபாய் குளோபல் வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 12 அணிகள் கலந்துகொண்டு விளையாடியது. இதன் இறுதி ஆட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இறுதி போட்டியில் அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் ( ABCC) அணியினருடன், தோப்புத்துறை டூ ஆர் டை அணி மோதியது. கேப்டன் ரியாஸ் தலைமையில் சலீம், தமீம், சமீமுதீன், அப்துல் பத்தாஹ், யாசீன், அஸ்லம்,அமீனுதீன், சமீர், அஹமது, ஹாஜா முகைதீன், சபீர், சைஃபுதீன், பிலால் ஆகியோர் அதிரை அணியில் இடம்பெற்று இருந்தனர்.

தோப்புத்துறை அணியில், ஹாஜா, அவ்லியா, பாண்டி, அப்பாஸ், கங்குலி, அசபி, அஜீஸ், செய்யது, வினோத், ஜமீல், சத்யா, ரஞ்சித், குமார், ரியாஸ், ஜாக் ஆகியோர் இடம் பெற்றனர்.

டாஸ் வென்ற அதிரை அணி முதலில் பேட் செய்தது. முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் 148 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆட வந்த தோப்புத்துறை அணி அனைத்து விக்கெட்களை இழந்து 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்ட முடிவில் அதிரை அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

அதிரை அணியின் நட்சத்திர வீரர் யாசீன் 50 ரன்கள் எடுத்தார். சபீர் 3 விக்கெட்கள், சமீர், அமீனுதீன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள், ஹாஜா முகைதீன், அஸ்லம் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்து தனது அணி வெற்றி பெற உதவினார்கள்.

6 வது முறையாக அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணி சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சாதனை நிகழ்த்திய அதிரை அணியினருக்கு பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...