Pages

Monday, January 9, 2017

குவைத்தில் இருந்து தினமும் சராசரியாக 80 வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றம் !

அதிரை நியூஸ்: ஜன-09
குவைத்திலிருந்து கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தினமும் சராசரியாக 80 பேர் என சுமார் 29,000 வெளிநாட்டவர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குவைத் நாட்டில் குடியிருப்பு விதிகளை மீறி சட்டவிரோதமாக நடந்தோர், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டோர் மற்றும் கடும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்காக தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளோரின் ஆவண வேலைகள் விரைந்து 1 வார காலத்தில் முடிக்கப்பட்டவுடன் விமான டிக்கெட்டுகள் முன்பதிவுகள் செய்யப்பட்ட 3 நாட்களில் வெளியேற்றப்படுவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளியேற்றப்படுபவர்களில் இந்தியர்கள் 26 சதவிகிதம் பேரும், எகிப்தியர்கள் 22 சதவிகிதமும், பிலிப்பைன்ஸ் மற்றும் எத்தியோப்பியவர்கள் தலா 13 சதவிகிதத்தினரும், இலங்கையர்கள் 6 சதவிகிதமும், பங்களாதேசத்தினர் 5 சதவிகிதமும், இதர நாடுகளைச் சார்ந்த 5ல் ஒருவரும் நாடு கடத்தப்படுகின்றனர்.

தெருச் சண்டைகளில் ஈடுபடுவோர், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் மற்றும் கடுமையான போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபடுவோர் யாரும் தப்பிக்க முடியாது எனவும் குவைத் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...