Pages

Thursday, January 12, 2017

தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 இடங்களில் ஆதார் உதவி மையங்கள்: பிப்-28ம் ந்தேதி வரை செயல்படும் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 இடங்களில் ஆதார் உதவி மையங்கள் வரும் பிப்ரவரி 28ம் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 9 தாலுகா அலுவலகங்களிலும் தமிழ்நாடு மின்னனு நிறுவனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் 3 நகராட்சிகளிலும் ஆதார் நிரந்தரசேர்க்கை மையத்தை நிறுவி நடத்தி வருகிறது. ஆதார் பதிவிற்கென கட்டணம் ஏதுமில்லை. இது ஒரு கட்டணமில்லா சேவையாகும்.
 
ஆதார் சேர்க்கைக்குப் பதிவு செய்து ஆதார் எண் அல்லது அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் மீண்டும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களுக்கு சென்று பதிவு செய்வதால் இம்மையங்களுக்கு அதிக அளவில் பொது மக்கள் வருகின்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது மேலும் ஏற்கனவே ஆதார் எண்ணிற்கென பதிவு செய்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வாயிலாக ஆதார் எண் வழங்கப் பெற்றவர்கள்இ ஒரு முறைக்கு மேல் எத்தனை முறை மீண்டும் மீண்டும் பதிவு செய்தாலும் புதிய ஆதார் எண் பெற இயலாது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மென்பொருள் அந்த பதிவுகளை நிராகரித்துவிடும்  எனவே, ஆதார் எண் பெறுவதற்கு ஒரு முறை பதிவு செய்தாலே போதுமானதாகும்.
 
ஆதார் அட்டைக்கு பதிவு செய்து ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் தங்களது ஆதார் எண்ணை தெரிந்து கொள்ள ஏதுவாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தற்போது ஆதார் உதவி மையங்களை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அமைந்துள்ளது இம்மையங்கள் 28.12.2016 முதல் 28.2.2017 வரை செயல்படும்.
 
இந்த ஆதார் உதவி மையங்களிலும் ஆதார் எண்ணிற்கு ஏற்கெனவே பதிவுகளை செய்துவிட்டு ஆதார் எண் / ஆதார் அட்டை கிடைக்கப்பெறாத பொதுமக்கள் மற்றும் ஆதார் அட்டையை  தொலைத்தவர்கள் நேரில் சென்று தங்களது பெயாஇ பிறந்த தேதிஇ அஞ்சல் குறியிடு இஎண் கை விரல் ரேகை மற்றும் கருவிழிகளைப்பதிவு செய்துஇ சில விநாடிகளில் தங்களின் ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.

மேற்கூறிய வழிமுறையில் கிடைத்த ஆதார் எண்ணை ஆதார் உதவி மையங்களின் அருகாமையிலேயே இயங்கும் அரசு இ-சேவை மையங்களில் காண்பித்து விரல்ரேகைஃ கருவிழியினைப்பதிவு செய்து ரூ.30/- மட்டும் கட்டணம் செலுத்தி கைக்கு அடக்கமான பிளாஸ்டிக் ஆதார் அட்டையாகவோ அல்லது ரூ.10/- மட்டும் செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெற்றுக் கொள்ளலாம்.
 
எனவே ஆதார் எண்ணிற்கு ஒரு முறை பதிவு செய்தவர்கள் திரும்ப திரும்ப நிரந்தர  ஆதார் பதிவு மையத்திற்கு செல்லத் தேவையில்லை என்றும் மேற்காணும் ஆதார் உதவி மையங்களை அணுகலாம் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...