Pages

Monday, January 9, 2017

எமிரேட்ஸ் விமானத்தில் பாம்பு – சேவை ரத்து !

அதிரை நியூஸ்: ஜன-09
நேற்று மஸ்கட்டிலிருந்து துபை புறப்படவிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் கார்கோ ஏற்றும் பகுதியில் பாம்பு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. எனினும், கார்கோ பகுதியில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டபோது விமானத்தில் பயணிகள் யாரும் ஏற்றப்பட்டிருக்கவில்லை. பாம்பு விமானத்திலிருந்து அகற்றப்பட்டப்பின் இன்று திங்கள் முதல் விமானம் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று பாம்பு புகுந்த சம்பவத்தை, 2006 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஸ்நேகஸ் ஆன் எ பிளேன்' என்ற ஆங்கிலப் படத்துடன் ஒப்பிட்டு, அப்படத்தின் கதாநாயகன் சாமுவேல் எல் ஜான்சன் இல்லாத நிலையில் பாம்பு மட்டும் விமானத்தில் இருந்ததாக சமூக வலைத்தளவாசிகள் ஹாஸ்யமாக பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் டொர்ரியான் நகரிலிருந்து மெக்ஸிகன் சிட்டிக்குப் பறந்த மெக்ஸிகன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுமார் 1 மீட்டர் நீள பாம்பு ஒன்று கண்டுபிடித்து அகற்றப்பட்ட சம்பவமே இதற்கு முன் விமானத்திற்குள் பாம்பு புகுந்த சம்பவமாகும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...