Pages

Tuesday, January 10, 2017

அதிரையில் களை கட்டிய கரும்பு விற்பனை !

அதிராம்பட்டினம், ஜன-10
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இன்று காலை முதல் அதிரை பேருந்து நிலையப் பகுதியில் கரும்பு வியாபாரம் களை கட்ட தொடங்கி உள்ளது. அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதியினர் கரும்புகளை வாங்கிச் செல்கின்றனர். பொங்கல் பண்டிகை முடியும் வரை இப்பகுதியில் கரும்பு வியாபாரம் களைகட்டும்.

இதுகுறித்து கரும்பு வியாபாரி துவரங்குறிச்சி வடிவேல் கூறுகையில்...
'பண்டிகைக்காக தஞ்சையிலிருந்து கரும்புகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். 10 கரும்புகளை கொண்ட ஒரு கட்டின் விலை  ₹ 220 க்கு விற்பனையாகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் கரும்புகளை வாங்கிச்செல்கின்றனர். பொங்கல் பண்டிகை முடியும் வரை விற்பனை இருக்கும்' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...