Pages

Wednesday, January 11, 2017

அதிரையில் 'பொங்கல் பரிசு தொகுப்பு' விநியோகம் ( படங்கள் )

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு 2017, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அரிசி பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகள் மூலமாக சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவித்து இருந்தார்.

சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீளம் கொண்ட கரும்புத்துண்டு, முந்திரி 20 கிராம், திராட்சை 20 கிராம் மற்றும் ஏலக்காய் 5 கிராம் ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன.

அதிரை மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இதில் பொதுமக்கள் வரிசையில் நின்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுச்சென்றனர்.

இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 6 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்று பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...